பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

மறுபாதியான வாழ்க்கை உலகத்திற்கு வந்தபோது அனுபவம் கிடைத்ததே அவையெல்லாம் நல்ல அனுபவம்.

படிக்காதவர்களோடு பழக்கம், இந்த பால்காரனுடனே நின்று விட்டதா இல்லையே! ஒரு தொடர் கதை போலவே தொடர்ந்து, ஒரு முடிவுக்கு வர4 ஆண்டுகள் ஆயின.

இப்படியெல்லாம் இடர்பட்ட போது, புத்தகம் எழுதுகிற புத்தி எனக்கு எப்படி ஏற்படும்?

அப்படியும் வந்ததே! அதுதான் அதிசயம். ஆச்சரியம், கையெழுத்ததுப் போடவும் ஓரிரண்டு வார்த்தைகள் எழுதவும் தெரிந்த ஒரு ஆள் தான், சைக் கிள் கடையின் பார்ட்னர், உடலழகுப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி கொடுக்கும் உதவி ஆளாகவும் அவர் இருந்தார்.

பயிற்சி செய்ய வந்தவர்கள் எல்லோருமே, நன்கு படித்தவர்கள். வக்கீல்கள், டாக்டர்கள், அலுவலகங்களில் பணி புரிபவர்கள். இப்படி வந்தபோது, உடலைப் பற்றிய விளக்கம், அவ்வப்போது 7ழுகின்ற சந்தேகங்கள், இவற்றிற்கெல்லாம், விளக்கம் தந்தால் தானே, வருபவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்!

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கம் சொல்லி, எனக் கும் அலுத்துவிட்டது. சில சமயங்களில் எரிச்சலும் ஏற்பட்டது.

இதனால் ஒரு முடிவுக்கு வந்தேன். நாம் பேசுகிற விளக்கங்களையெல்லாம் தொகுத்து, ஒரு புத்தகமாகப் போட்டு விட்டால் என்ன?

சிந்தனை செயல் வடிவம் பெற்று விட்டது. நூல் எழுதுவதற்கு முன்னரே, தலைப்பையும் தேர்ந்தெடுத்து விட்டேன். கேட்பதற்கு இனிமையாக, புதுமையாக இருக்கவேண்டு மல்லவா உடற் பயிற்சி என்றதும் பின் வாங்காமல், வாங்க முன் வரவேண்டும் என்பதாக தலைப்பு