பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

டாக்டர் எளில், நவராஜ் செல்லையா

இருக்க வேண்டும் என்பதற்காக நீங்களும் உடலழகு பெறலாம்’ என்று தலைப்பு தந்தேன்.

ஆர்வம்ாகத்தான் ஆரம்பித்தேன். அத்தனை ஆவேசம் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஒரு மாதத்திற்குள்ளே 100 பக்கங்கள் உள்ள புத்தகம் ஒன்றை எழுதி விட்டேன்.

புத்தகத்தை அச்சிட வேண்டுமே ? யாரிடம் போவது? எவரிடம் போய் கேட்பது?

யாராவது புத்தகத் தயாரிப்பாளரை அணுகிக் கேட்கலாம். நமக்கும் சுலபம். புத்தகமும் விரைவில் வெளியாகி விடும் என்று நம்பினேன். முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டேன்.

நான் ஏறி இறங்காத பதிப்பகம் இல்லை. சென்னையில் உள்ள முக்கியமான பதிப்பகம் அனைத்திலும் நான் எழுதிய ஸ்கிரிப்டுடன், ஏறி இறங்கினேன்.

என்னை ஏற இறங்கப் பார்த்தவர்கள் பலர். யாராடா இவன்? கிறுக்கனாக இருப்பான் போலிருக்கிறது’ என்று ஏனோ தானோ என்று பார்த்தவர்கள் பலர். பேசியவர்கள் பலர்.

இப் படி, இந்தத் தலைப் பில் புத்தகம் போட்டால் யாரையா வாங்குவார்கள். நாங்கள் தலையில் கை வைத்துக் கொண்டு தெருவில் நிற்க வேண்டியது தான். ஏதாவது நாவல், சிறுகதை, செக்ஸ் , இப் படி கொண்டு வந்தால், நாங்கள் முயற்சிப்போம் என்று முடிவாகக் கூறியவர்களும் உண்டு.

நானும் ஒரு முடிவுக்கு வந்தேன். ஏறி இறங்கிய பதிப்பக வாசலில் நின்று, வைராக்யமாக, உறுதி எடுத்துக் கொள்வது எனக்கு வழக்கமாக, அரிய பழக்கமாகவே போய் விட்டது.

வெகு வேகமாக என் மீசையை முறுக்கிக் கொள்வேன் என் மனதுக்குள்ளேயே பேசிக்கொள்வேன். உடற்பயிற்சி என்றால் இவ் வுளவு கேவலமாகவா இருக்கிறது? இதை நானே பதிப் பிப் பேன், புத்தகத் தை வெளியிடுவேன். போட