பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 121

மாட்டேன் என்று சொன்ன பதிப்பாளர்களே! என்னிடம் இப் பொழுது வந்து, புத்தகங்களை காசு கொடுத்து வாங்குமாறு செய்வேன். இது சத்தியம் ‘ என்று எனக்குள்ளேயே கத்திக் கொண்டு, என்னை தோல்வியானது துவளச் செய்து விடாமல் தேற்றிக் கொள்வேன். எனக்கு கதி நான் தான். வேறு கதி? -

எப்படியும் நீங்களும் உடலழகு பெறலாம்’ என்ற எனது மூன்றாவது புத்தகத்தைப் போட்டுவிடவேண்டும் என்று, உடனே பலப்பல முயற்சிகளை மேற்கொண்டேன்.

முதல் புத்தகத்தை 150 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கிப் போட்ட அழகு பதிப் பகத்தை நினைத்துக் கொண்டேன். -

இரண்டாவது புத்தகம், காரைக் குடி அழகப் பா உடற்பயிற்சிக் கல்லூரி முன்னாள் மாணவர் கழகத்தின் சார்பாக, கழகத்தின் பணம் கொண்டு வெளியிடப்பட்டதை நினைத்துக் கொண்டேன்.

மூன்றாவது புத்தகம், நானே போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, விழி பிதுங்க நேரிட்டது. வயிற்றுப் பாட்டுக்குத்தான் வருமானம் போதும் என்கிற நிலையில், எவரும்போட விரும்பாத, புத்தகம் தயாரிக்க முயற்சிக்காமல் ஒதுக்கித் தள்ளிய ஒரு விளையாட்டுத் துறையில், மேலும்புதிய முயற்சியை மேற்கொண்டு, மேலும் மேலும் கடனாளியாவதா?

குடும்பமா? புத்தகத்தைப் போட்டுத்தான் ஆக வேண்டுமா? குழப்பக் கடலுக்குள் கொஞ்ச நாள் குளியல், கடைசியில் இலட்சியம் தான் என்னைத் துக்கி நிமிர்த்தியது. துரத்திப் பிடித்தது.

குடும் பத் தைக் கடவுள் காப்பாற்றுவார் என்று மனைவியிடம் இருந்த மீதி நகைகளை மார்வாடிக் கடையில் அடகு வைத்து, பணம் புரட்டிக் கொண்டு, புத்தக வேலையை