பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

ஆரம்பித்தேன்.

பதிப்பகத்திற்கு என்ன பெயர் வைப்பது எனது இரண்டு மகன்களின் பெயர்களை தனித்தனி சீட்டில் எழுதி சுருட்டிப்போட்டு, ஒன்றை எடுக்கச் செய்தேன். ராஜ்மோகன் என்று வந்தது.

உடனே ராஜமோகன் பதிப்பகம் என்று ஆரம்பித்தேன். வீரசிவாஜி, குதிரை மேல் வேகமாக சவாரி செய்வது போல ஒரு படத் தைத் தயாரித் தேன். அதுவே பதிப் பக சின்னமாக இருந்தது.

எனது அட்டைப் படத்திற்கு யாரைப் போடுவது என்று யோசித்து, என்னிடம் வேலைக்கு இருந்த சைக் கிள் கடை வேலை யாளை, பயிற்சி செய்வதுபோல, போஸ் கொடுக்கச் செய்து, படம் எடுத்து அட்டையில் போட்டேன்.

யாரோ முகம் தெரியாத ஒருவரை, அட்டைப் படத்தில் போடுவதை விட, நம் மிடையே உள்ள, நமக்கு தெரிந்த ஒருவரின் படத்தைப் போட்டால், அவர் நன்றியோடாவது இருப்பார், அவரை வாழ்வில் உயர்த்தியது போல இருக்கும் என்ற ஒரு நல்லெண்ணத்தில் தான் இப்படிச் செய்தேன்.

ஆனால், அந்த மனிதன் புத்தகம் வந்த பிறகு, செய்த அயோக்கியத்தனத்தை, என்னால் ஜீரணிக்க முடியவில்லை. கவுடப்பட்டு, காசு சேர்த்து, எதிர் நீச்சல் போட்டு, புத்தகத்தை வெளிக் கொணர்ந்து, பலரிடம் கொடுத்த போது, அவர்கள் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. காரணம், புகழ்ச்சியைவிட, எனக் கு ஏற்பட்டிருந்த மனதிருப்தி முழுவதும் கேள்விப் பட்ட விஷயத்தில் மரண அடியைப் பெற்றிருந்தது.

மலர்ப் படுக் கையிலே நல் ல மகிழ்ச்சியுடன் படுத்தபோது, முள் ஒன்று குத்தியது போல, அந்த வேலைக்கார நண்பன் பேசியிருந்த பேச்சுக்கள் எனக்கு வேதனைக்கு மேல் வேதனையை அளித்தன.