பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

16. கடவுள் கொடுப் பார்

புத்தகம் எழுதவேண்டும் என்ற வேகத்தில் தான், கல்லூரி வேலையை ராஜினாமா செய்தேன். சென்னைக்கு வந்து, பள்ளி ஒன்றில் சேர்ந்தேன். ஏனென்றால், குடும்பச் செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக,

ஆனால், கல்லூரி வேலையிலிருந்து கீழே வந்து, நான் பள்ளியில் பணியாற்றியதைப் பற்றி, பலர் பல விதமாக, அவர்களுக்கு யோசிக்கத் தெரிந்த அளவில், நிறையவே பேசினார்கள்.

ஏதோ நான் கல்லூரியில் தவறு செய்தது போலவும், அதனால் வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும், கடைசியில் பள்ளியில் வந்து சேர்ந்து கொண்டேன் என்பதாகவும் பேசினார்கள்.

கேள்விப்பட்ட நான், கவலைப்படவில்லை. கிண்டலும், கேலியும் எனக் குப் பழக்கப்பட்டது தானே. இந்த ஏச்சும், பேச்சும், லட்சியத்தில் இருந்த எனது பிடிப்பைத் தளர்த்தி விட முடியவில்லை.

சுரேஷ என்பவரோடு சேர்ந்தேன். கலை நீதி என்ற பத்திரிகை ஒன்றைத் தொடங்கினேன். எனக்கு அதில் ஏற்பட்ட