பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

அவமானத்தால், நானே ஒரு புதிய மாத இதழை ஆரம்பித்து, பெருமிதம் கொண்டேன்.

மன திருப்தி, பண திருப்தியைத் தரவில்லை, வறுமைக்கடியில் நான் வதங்கியதால், பணம் திரட்டிட, எழுத்துப் பணி எனக்கு உதவ வில்லை என்பதாலும்; சினிமா முயற்சிக்கு நாடகம் தான் ஏணிப்படி என்று பலரிடம் பெற்ற உபதேசத்தாலும் நாடகத்தில் இறங்கி, இரவு பகலாக அலைந்து திரிந்து, 2,3 ஆண்டுகளை வீணாகக் கழித்து விட்டேன்.

இந்நிலையில் தான், பால்கார ராமானாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, எருமை மாடு ஒன்றை 2000 ரூபாய்க்கு வாங்கி, 8 மாதம் கழித்து எருமை மாட்டை பால்காரன் சொந்தம் கொண்டாடி ஒட்டிக் கொண்டு போக பறி கொடுத்துவிட்டு ஏமாந்த கதையையும் உங்களுக்கு முன் பகுதிகளில் விளக்கமாக எழுதியிருந்தேன்.

வேதனையான இந்த ஏமாற்ற நாடகத்திலிருந்து விடுபட்டு, மனச்சுமையை இறக்க முயற்சித்தபோது தான், சைக் கிள் கடையை ஆரம்பிக்க சேது என்ற மனிதனை விதி சந்திக்க விட்டது.

சைக்கிள் கடை வியாபாரத்திலிருந்து உடற் பயிற்சி தருகிற ராஜ மோகன் உடலழகுப் பயிற் சிப் பள்ளி என்ற நிலையத்தையும் ஆரம்பித்தேன்.

அப்பொழுதே, (Man in Madras) என்ற நாடகம் ஒன்றை எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கிக்கொண்டிருந்தேன். அன்று பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசைக்குழு நடத்தி வந்த இளையராஜாதான், அந்த நாடகத்திற்கு இசையமைப்பாளர்.

அந்த நாடகத்தில், முரட்டுத்தனமான அடியாள் போன்ற வேஷத்தை உருவாக்கி, எனது சைக்கிள் கடை வேலையாளை,

அதில் நடிக்கவும் வைத்தேன்.

சைக்கிள் கடையில் ஒர்க்கிங் பார்ட்னர். உடற்பயிற்சிப்