பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | 3 ||

என்பது தான். அதற்காக நான் அலைந்ததுதான், என் நேரத்தையெல்லாம் ஆட் கொண்டு விட்டன.

விளையாட்டுக்களின் விதிகள் என்ற எனது இரண்டாவது புத்தகத்திற்குத் தலைப் புத் தந்து, ஆங்கிலத்தில் இருந்த விதிகளை தமிழாக்கம் செய்யத் தொடங்கினேன். ஓராண்டுக்குள் புத்தக வேலை முடிந்தது. பதிப்பாளர் ஆர்வமுள்ளவராக இருந்திட வேண்டும் என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருந்தேன்.

அழகப் பா உடற்கல் விக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக, இந்தப் புத்தகத்தை வெளியிடுவது என்று, அப்போதைய முதல்வராக இருந்த திரு. ராப்சன் அவர்களுடன் பேசி. ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தேன்.

பல மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ஒப்புதல் பெற்று, புத்தகமாக்கும் பணியை நானேசுமந்து கொண்டு, இரண்டாவது புத்தகத்தை வெளிக் கொணர்ந்தேன். பணம் மாணவர் கழகத்திற்கு உரியது. உழைப்பு என்னுடையது, செலவு போக, இருக்கும் நிகரத்தொகையை, இரண்டாகப் பிரித்துக் கொள்வது என்பதுதான் ஒப்பந்தம்.

பல ஆண்டுகள் என்புத்தகத்தை (ராப்சன் இருக்கும் வரை), அழகப்பா உடற் கல்வி மாணவர்களுக்குக் கொடுத்தனர், அவருக்குப் பிறகு முதல்வராக வந்த எனது இனிய நண்பர் திரு ஆதிச்ச பிள்ளை அவர்கள், புத்தகத்தை மாணவர்களுக்குத் தராதவாறு பார்த்துக் கொண்டார். அவர் அன்பு மனத்திற்கு, நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் அப்படி செய் விப்தற்குதான், நான் வேறு வழிகளைப் பார்த்து, என் எழுத்து வேலையைத் தொடரக் கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டேன்.

கல்லூரியில் எனது புத்தகம் பாடமாக இடம்