பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 137

18. நம்பியும் நம்பிக்கையும்

நீங்களும் உடலழகு பெறலாம் என்ற எனது மூன்றாவது புத்தகத்தை எழுதி, அதனைத் தயாரித்து வெளியிடும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டேன்.

சாதாரண சிறிய அச்சகத்திற்குப் போனால், செலவு குறையும். ஆரம்ப நிலை ஒவியரிடம் போனால், சம்பளம் குறையும். இப்படி நினைத்துக் கொண்டு, புதிய அச்சகம் பக்கம் போனேன்.

நாட்கள் நிறைய ஆகின. போய் வர செலவு, அச்சில் குறைகள். இப்படி செலவுகள் அதிகமாகி, ஒரு நல்ல புத்தகமாக அமைய வேண்டிய நூல் அரை குறையாகத் தெரிந்த முடிவெட்டுவோனிடம் சிக்கிய தலைபோல, வந்து சேர்ந்தது.

அப்பொழுதே முடிவெடுத்துக் கொண்டேன்.

ஒரு செயல் செழிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும் என்றால், நன்கு தெரிந்த, அனுபவம் உள்ளவர்களிடம் தான் போக வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.

பல குறைகளுடன், பார்ப்பதற்கு மனக்கவுடம் தரக்கூடிய வகையில், புத்தகம் வெளிவந்தவுடன், என்னையே நான் திட்டிக் கொண்டேன்.

-