பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 143

பொறுப்புக்களை எடுத்துக் கொண்டு, வசனம் எழுதி, ஒத்திகை பார்த்து, நடிகர்களும் நடிகைகளும் அரங்கேற்றம் செய்யத் தயாராக இருக்கும் போது, அவர் ஒரு குண்டைத் துக்கிப் போட்டார்.

கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு என்று என் பெயர் இருந்தால்தான், நான் நாடகத்தை அரங்கேற்ற விடுவேன். இல்லையென்றால், நிறுத்தி விடுகின்ற எல்லா வேலைகளையும் செய்வேன் என்றார்.

நாடக அரங்கிற்குப் பணம் கட்டியாகிவிட்டது. எல்லோரிடமும் டிக் கெட் விற் றாகி விட்டது, எப்படி நாடகத்தை நிறுத்துவது? எல்லா செயல்களையும் செய்து, இரவு பகலாக சிரமப்பட்டு, கடைசியில் அவரே எல்லாமுமாக இருக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டு, நாடகத்தை அரங்கேற்றி வைத்தேன்.

இதில் எனக்கு என்ன லாபம் என்றால், பல அவமானங்கள், பல சோதனைகள், போலீஸ் ஸ்டேஷனில் போய் உட்கார்ந்து, கோர்ட்டுக்குப் போய் நிற்க, என்பன போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பட, இந்த நாடகம் தான் என்னை நடிக்க வைத்துவிட்டது.

உதவிகள் செய்யப்போய், போதுமடாசாமி என்று கும்பிடு போட்டு விட்டு, நம்பியிடம் இருந்து கழன்று கொண்டேன். வியாபார ஆரம்பத்திலேயே இப்படி சோதனைகளா என்பதில் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப் பற்றி கவலைப்படவில்லை.

நாடகத்தின் மூலமாக எனக்கு ஏற்பட்ட சோதனைகள் வேதனைகள் இருக்கிறதே? அவற்றை சொல் லி மாளாது. சொன்னாலும் தீராது ஆறாது.