பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 145

நாடகமாக இருந்தது.

அந்த நாடகத்திலே நகைச்சுவை நடிகராக ஒருவரை நான் அறிமுகம் செய்தேன். உடற் கல்வித்துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றியவர். நான் அங்கு அடிக்கடி போய் வர நேர்ந்தபோது. தன்னை யார் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். r

நாடகத்தில் ஒரு வாய்ப்பு தந்தால், நன்றி உடையவனாக இருப்பேன் என்று, தாழ்ந்து பணிந்து கேட்டுக்கொண்டார்.

சரி உதவலாம் என்றுதான் நாடகத்தில் காமெடி வேஷம் கொடுத்தேன். அவரோ என் வாழ்க்கையில் வில்லன் வேஷம் போட்டு, விளையாடி விட்டார்.

அந்தக் காமெடி நடிகர், நாடகம், நடந்த ஒரு வாரம் கழித்து, என்னைப் பார்க்க, என் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் முகத்திலே கலவரம். பேச்சிலே குழப்பம். கை கால்களில் நடுக்கம். முகத்திலே சவக்களை தெறித்தோடியது.

என்ன விஷயம் என்று கேட்டேன்.

‘என் மனைவிக்கும் நான் வசிக்கும் தெருவி லுள்ள பெண்களுக்கும் பல நாட்களாகத் தகராறு. இன்று அது உச்சக் கட்டத்திற்கு வந்து விட்டது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் வீட்டை காலி செய்துவிட்டு வராவிட்டால், எங்கள் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் உடனே எந்த வீடும் எனக் குக் கிடைக்கவில்லை. உங்கள் வீட்டில் ஒரு பகுதியில் தங்கியிருக்க அனுமதி கொடுங்கள். இரண்டொரு நாளில், வேறு வீடு பார்த்துக் கொண்டு போய், விடுவேன். உங்களை நம்பியே வந்துவிட்டேன்’ என்று புலம்பினார் அந்த நடிகர்.

இயற்கையாக இருக்கும் என்று எப்போதும் ஏற்படுகிற என் அனுதாபம் அந்த வேண்டுகோளைக் கேட்டு பீறிட்டு