பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

விட்டது. என்ன செய்கிறேன் என்று தெரியாமல், என்னிடம் இருந்த பரிதாபம், சரி என்று சொல்லி விட்டது.

அந்த சரி என்ற ஒரு சொல்தான் என்னைப் படாத பாடுபடுத்தி, புரட்டி எடுத்துவிட்டது.

இரண்டு நாளைக்குத் தங்கிவிட்டு, வேறு வீடு பார்த்துக் கொண்டு போகிறேன் என்று வந்து தங்கிக் கொண்ட அந்த மனிதர், வேறு வீடு எதுவும் கிடைக்கவில்லை என்று சாக்குபோக்கு சொல்ல ஆரம்பித்து விட்டார்.

இதுபோல வசதியான வீடு எங்கே கிடைக்கப் போகிறது என்று, தன்னைப் பார்க்க வருபவர்களிடம் பேசி பெருமை கொள்ளவும் தொடங்கிவிட்டார்.

பாவப் பட்டு, என் சமையல் அறையை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, குழம்பிய மனதுடன் கஷ்டப்பட்ட எங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் அவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்தது.

அந்த ஆள் ஒல்லியாக இருந்தார். அந்தப் பெண்ணோ அவருக்கு எதிர்மாறாக, குண்டாக, கனதாராவாக இருந்தாள். அந்தப் பெண் ஒரு சத்தம் போட்டால், சர்வ நாடியும் அடங்கி அவர் அமைதியாகி விடுவார்.

இந்தத் தொந்தரவு தாங்காமல் தானோ என்னவோ, அவர் காலையில் ஆபீஸ் போய் விட்டால், இரவு 10 மணிக்கு மேல் தான் வருவார். வந்ததும் சாப்பாடு, துக்கம், இப்படிஅவர் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது.

எனக்குள்ள பிரச்சினை நான் ஒரு எழுத்தாளன். அமைதி எனக்கு வேண்டும், எழுத, யோசிக்க, ஆனால் அந்தப் பெண்ணோ நாள் முழுவதும் ரேடியோ கேட்பது. ஆசை வந்துவிட்டால் சத்தம் போட்டு பாடுவது.