பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

டாக்டர் எளில் நவராஜ செல்லையா

வேண்டும் என்கிற பதைபதைப்பு. - இப்படி நான் தன்னந்தனியனாகவே, நாட்களை யும்

நேரத்தையும் ஒட்டிக் கொண்டிருந்தேன். எனக்கென்று பேசிப்

பழக நண்பர்கள். கிடைக்க வில்லை.

காரணம் நண்பர்களை நான் தேடிப்போவது இல்லை. என்னை நாடி வருபவர்களிடம் நான் கொஞ்ச நேரமாவது பேசிப் பொழுதைக் கழிக்க வேண்டாமா? அப்படி நேரத்தை வீணாக்கக் கூடாது என்ற எனது மனோநிலை.

எப்படி மற்றவர்கள் இதை சகித்துக் கொள்வார்கள்?

அதனால் , எனக் குத் தெரிந்தவர்கள் தான் அதிகமாக இருந்தார்களே ஒழிய, ஆத்மார்த்தமான நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் போய் விட்டார்கள்.

வித்யா மந்திர் பள்ளியில் பணியாற்றியபோது, எனது வாழ்க்கை நிலை இப்படித்தான் அமைந்திருந்தது.

தொழில் சம்பந்தமான, தொடர்பு கொண்ட அன்பர்கள்தான் எனக்கு, மிகவும் வேண்டியவர்கள், அவர்களில் அச்சகத்தார். பதிப் பகத்தார், நூலகத் துறையினர், புத்தக விற்பனைக் கடை உரிமை யாளர்கள். பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஆசிரியர்கள், இப்படித்தான் இருந்தனர்.

இத்தகைய குழுவில் ஒருவர் தமிழ் முடி என்பவர், தமிழ்ப் பற்று மிகுந்தவர். சிறுவர்களுக்காக நூல்கள் எழுதி, புத்தகங்களை பதிப்பித்து, தானே விற்று விடுவதில் கெட்டிக் காரர் அவர். ஒரு பள்ளியில் ஆசிரியர்.

வித்யா மந்திர் பள்ளிக்கு புத்தகங்கள் விற்க வந்தபோது அறிமுகமானார். எனது நூல்கள் எழுதும் பணியைப் பார்த்து, புத்தகங்களை எந்த அச்சகத்தில் அச்சிடுகின்றீர்கள் என்று கேட்டார். சரிய ான அச்சகம் அமையவில்லை என்றேன்.