பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி }

நான் அச்சிடும் அச்சகம் ஒன்று இருக்கிறது நண்பர்கள் அச்சகம் என்று பெயர். உரிமையாளர் மணி என்பவர் நல்ல மனிதர். அவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்துகிறேன் என்று தமிழ் முடி, தேனாம் பேட்டையில் அமைந்திருந்த அந்த நண்பர்கள் அச்சகத்திற்கு அழைத்துச் சென்றார்.

மணி நல்ல நண்பராகவே ஆகிவிட்டார். ஏறத்தாழ 50 புத்தகங்கள் அங்கேதான் அச்சாகியிருக்கின்றன என்றால், அது அவரது அன்பாகப் பழகும் சுபாவத்தால் தான்.

பள்ளியை விட்டால், நான் அதிக நேரம் தங்கியிருக்கும் இடம் நண்பர்கள் அச்சகத்தில் தான்.

ஏழாவது புத்தகம் எழுதியபோதுதான், நண்பர்கள் அச்சகத்தில் எனது புத்தகம் அச்சாகத் தொடங்கியது. அங்கு போன பிறகுதான், எனக்கு எழுத்தில் ஒரு வேகமும், அடக்க முடியாத ஆர்வமும் ஏற்பட்டது. அதாவது காட்டுத்தீ பற்றிக் கொண்டபோது, புயல் வீசிய நிலைமை போல அந்த சூழ்நிலையை விளக்கலாம்.

அதற்குக் காரணம், எனக்கு அமைந்த குருமார்கள்தான்.

ஒருநாள் அச்சகத்தில் அமர்ந்து, நானும் மணியும் பேசிக்கொண்டிருந்தபோது, வயதான ஒரு பெரியவர் வந்தார். புத்தகத்துறை சம்பந்தப்பட்டவர்தான். அறிமுகம் ஆனபிறகு, என் இலட்சியத்தைப் பற்றி அவரிடம் கூறினேன். அவரும் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு, ஒரு நிகழ்ச்சியைப் பற்றி, வெகுவிமரிசையாக விவரித்துக் கொண்டு வந்தார். (மன்னிக்கவும். அவர் பெயரை மறந்து விட்டேன்.)

மகாகவி பாரதி யாருக்கு வேண்டிய நண்பர்களில், ஒருவருக்கு இவர் நண்பராம். அந்த நண்பர் பாரதியைப் பற்றி நிறைய பேசுவாராம். அவர் குறிப்பிட்டதாக, ஒரு நிகழ்ச்சியை