பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y Q7 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | 62

வாசலிலே நிற்பேன். கடைசியில் இப்போது பார்க்க முடியாது என்று சொல்லி, என்னைப் பார்க்காமலேயே அனுப்பி யவர்கள் ஏராளம்.

சிலர் உள்ளே வரச்செய்து, என்ன பெரிய புத்தகம் என்று என் புத்தகங்களைப் பார்க்காமலே, அனுப்பி வைத்தவர்களும் ஏராளம்.

தலைமை ஆசிரியர்களையாவது என்னால் தாக்குப் பிடிக்க முடிந்தது, என் துறையில் பணி யாற்றும் சக ஆசிரியர்களை சமாளிப்பது தான், எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

பள்ளியில் பயிலுகிற மாணவ மாணவிகளைக் குறிவைத்தே, நான் புத்தகங்களை எழுதத் தொடங் கினேன்.

விளையாட்டுத்துறையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்றால். உடல் பற்றிய முக்கியத்துவத்தை உண்மையாக உணர்த்த வேண்டும் என்றால், இளைய தலைமுறையிடமே போகவேண்டும் என்று, ஆரம்ப காலத்திலேயே நான் உணர்ந்து கொண்டிருந்தேன்.

Positive thinking Grart strio Gr 1 epig, Tolos (pl) usub groups முடிவு கொள்கிற நம்பிக்கை உணர்ச்சியைப் பற்றியே, நான் அதிகம் எழுதினேன். ஏனென்றால், இளைஞர்கள் முன்னேற இந்த நம்பிக்கை உணர்வுதான் கட்டாயத் தேவையாக இருந்தது, இருக்கிறது.

என்னுடைய எழுத்துக்களில் காதல், அரசியல், சினிமா போன்ற பகுதிகளுக்கு இடமே இல்லாது போயிற்று.

ஒடுகிற தண்ணிரை, கையால் தள்ளி விட்டுக் கொண்டே நான்தான் தண்ணிரை ஒட வைக்கிறேன் என்று, தலைக்கணமாய் பேசுகின்றவர் களைப் போல, இயற்கையான உணர்வுகளான செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விடுகிற எழுத்துக்களை