பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

நான் என் புத்தகத்தைப் பற்றி அவர் ஏதாவது பேசுவார். கொஞ்சம் தவறுகளை சுட்டிக் காட்டினாலும், சமாளித்துக் கொள்ளலாம் அல்லது பாராட் டியாவது பேசமாட்டாரா என்றெல்லாம் என் மனதிலே ரயில் வேக எண்ணங்கள் ஒடிக் கொண்டிருந்தன.

மேஜையின் ஒரு பக்கம் அவர், மறுபக்கம் நான் என்று எதிர் எதிர்த்திசையில் உட்கார்ந்திருந்தோம்.

கைப்பந்தாட்டம் பற்றிய புத்தகமா... என்று பேசியபடி, அந்தப் புத்தகத்தை மேஜைமேல் தூக்கிப்போட்டார்.

அவர் போட்ட வேகம், சர்ரென்று பாய்ந்து வந்த புத்தகமானது, என் பக்கமாக வந்து, என் நெஞ்சின்மீது மோதியபடி நின்றது.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை நானும் எதிர்பார்க்க வில்லை. அவரின் சங்கடம் எனக்குப் புரிந்தது. எனக்கோ நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்தது.

(குறிப்பு - இந்த நிகழ்ச்சிதான், எனக்கு பல சூழ்நிலைகளில் பொறுமையைக் காட்டுகின்ற பக்குவத்தைக் கொடுத்தது என்பதால், அந்த ஆசிரிய நண்பரை, இன்றும் நான் பாராட்டி மகிழ்கிறேன். அவர் முகம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறதே தவிர, பெயரோ, நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. என்றாலும், அந்த நிகழ்ச்சியை 20 ஆண்டு காலங்கள் ஆகியும், மறக்காமலே இருக்கிறேன் என்பதுதான் உண்மை.)