பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 166

என் முகமாற்றத்தைக் கண்டு, எதிரே இருந்தவர் கொஞ்சம் கதிகலங்கியபடி உட்கார்ந்திருந்தார். நானோ சமாளித்துக் கொண்டு, முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டேன். அந்த ஐந்து நொடிகளுக்குள்ளே, ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்து ஓங்கி அமிழ்ந்துபோயின என்பது அவர் அறியாததுதான்.

ஆத்திரப்படாதே! அது அறிவுக்குச் சத்துரு. கோபம் உன் கொள்கைகளைத் தோற்கடித்துவிடும். வீணான சண்டை, உன் லட்சிய வேகத்தின் விலா எலும் புகளை உடைத்துவிடும். கோபப்படாதவன் கோழை என்பது உண்மைதான். ஆனால் கோபப் படுகிறவன் ஏமாந்து போகிறான். எதிர் பார்க் கிற பலன்களை இழந்துவிடுகிறான். ஆத்திரப்படுகிறவன் தனது வீழ்ச்சிக்கு அவனே காரணமாகிவிடுகிறான், என்றெல்லாம் என் உள் மனம் உணர்த்தியதன் விளைவு, நான் சாந்தமாகிவிட்டேன்.

எதிரே இருந்த ஆசிரிய நண்பரைப் பார்த்து, நான் பேச ஆரம்பித்தேன். நீங்கள் இப்போது துக்கி எறிந்தீர்களே! இது நான் எழுதிய புத்தகம்தான். இந்தப் புத்தகமானது கைப் பந்தாட்டம் பற்றியது. கைப்பந்தாட்டம் பற்றி உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கிறது? இந்த 120 பக்கத்தில் உள்ள எல்லா விஷயங்களும், உங்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவும் உங்களுக்குத் தெரியும் என்று, மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்? இந்தப் புத்தகத்தை, மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் படிக்கும் போதுதானே, உங்கள் பெருமை வெளியாகும், அதற்குத்தான் நான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதினேனே தவிர, என் அறிவைக் காண்பிப்பதற்காக அல்ல என்றேன்.

அவருடைய அறிவு பிறருக்குத் தெரியும் என்ற ஒரு வார்த்தை, அவருடைய (அகம்பாவ) மனதை மாற்றிவிட்டது.