பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

- இப்போது நேரமில்லை, இன்னொருமுறை பார்க்கலாம் என்று அவர் நழுவப் பார்த்தார். இத்தனை பேர்களுக்கு முன்னால் நீங்கள் குற்றம் கூறிவிட்டீர்கள். அவர்கள் முன்னால் தவறுகளைக் காட்டினால் தானே நல்லது. அவர் களுக்கும் உங்கள்மேல் ஒரு மரியாதை வளர உதவும். வாருங்கள் என்று கையை பிடித்து இழுக்க ஆரம்பித்தேன்.

சார் சொல்வது சரிதான். வாருங்கள் போகலாம் என்று கூட இருந்தவர்களும் வற்புறுத்தவே, அவர் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளானார். நான் உங்கள் புத்தகத்தை பார்த் திருக்கிறேன். ஆனால் படிக்கவில்லை என்று சமாளித்துவிட்டு, உண்மையை ஒத்துக்கொண்டார்.

இதைக் கேட்டபிறகு நான் மெளனமாகி விட்டேன். ஆனால் மற்றவர்கள் அவரை ஒரு மாதிரியாகப்பேசி, கிழி கிழி என்று கிழித்து விட்டார்கள். அதாவது நான் எதைப் பேசவேண்டும் என்று நினைத்தேனோ, அவற்றையெல்லாம் அவர்கள் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சிகளை ஏன் இங்கே எழுதினேன் என்றால், என்னை அவமானப்படுத்திவிட்டு, பெருமை தேடிக்கொள்ள மேற்கொண்ட முயற்சி. இது ஒரு ஆரம்பம்தான். ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் இப்படி நடந்தேறியிருக்கின்றன. -

இதிலே எனக்கு என்ன நன்மை ஏற்பட்டது என்றால், ஒவ்வொருமுறை ஒவ்வொருவரிடமும் நான் அவமானப்படு கிறபோதெல்லாம், அதை ஈடுகட்ட கடுவேகத்துடன் எழுதத் தொடங்கினேன்.

வாழ்க்கையோ வியாபாரியாய் விரட்டியது. வாழ்க்கை அமைப் போ, பயங்கரமான அவமானத்திற்குள்ளே அழுத்தியது. எனக்கு ஏற்பட்ட அவமானங்களை என் வளர்ச்சிக்காக ஆக்கிக் கொண்டேன். அதுதான் என்னை அழியாமல் காத்தது.