பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 176

கிடைக்கும் யார் கொடுப்பார்? யார் நமக்கு எஜமானன்? என்னுடைய வேலை நேரம் என்ன? நான் வேலை செய்யும் இடம் தான் எங்கே? இப்படிப்பட்ட கேள்விகள், துப்பாக்கி யிலிருந்து வெளிவந்த குண்டுகளாக என்னை விரட்டின. மிரட்டின, துரத்தின, துளைத்தன.

விளையாட்டுப் புத்தகங்களை யார் வெளியிடுவார்கள்? புத்தகத்தைப் பார்த்து விட்டு பயந்தவர்கள்தான் அதிகம், புத்திமதி தந்தவர்களோ ஏராளம். ‘வேண்டாம் இந்த விபரீத முயற்சி, உன் வாழ்க்கையும் வீணாகிவிடும். உன் குடும்பமும் ஒன்றுமில்லாமல், உருப்படாமல் போய்விடும் என்று தந்த எச்சரிக்கைகள் ஏராளம் ஏராளம்.

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டேன். என் மனைவியிடம் இது பற்றி பேசிப் பார்த்தேன். டிவிஎஸ் வேலையை விட் டுவிடப் போகிறேன். சம்பளம் வராது. புத்தகம் விற் றால் தான் பிழைப்பு. கஷ்டம் தான், காசு வரும் வரை. நீங்கள் என்ன நினைக் கிறீர்கள் ? என்று என் குழந்தைகளிடமும் கேட்டேன். அவர்கள் கூறிய பதில், என்னை திக்குமுக்காட வைத்து விட்டது.

‘உங்களுக்கு சம்மதம் என்றால், நாங்கள் ஆலமரத்தடியின் கீழிருந்து பொங்கி சாப்பிட்டு விட்டு, தங்கிக் காலத்தைக் கழிக்கத் தயார்’ என்ற பதில் தான் என்னை, உணர்ச்சி மயமாக்கிவிட்டது.

என் இலட்சியப் பயணத்திற்கு, என் குடும் பம் அஸ்திவாரமாக இருந்து, தந்த ஆதரவு தான், என்னால் 100 புத்தகங்களுக்கு மேல் எழுத வைத்தது என்பதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். மகிழ்கிறேன்.

Think the worst and do the best’ GTGrl ugi egl, frst) Gol i பழமொழி, மோசமான முடிவுகளை சந்திக்கத் தயாராக இரு. ஆனால் உன்னால் சிறந்தது எதுவோ அதைச் செய்ய முனைந் திரு என்ற பம மொமியின்படி, நான் வாழத்