பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

தொடங்கினேன்.

விளையாட்டுப் புத்தகங்கள் எழுதி, வாழ்க்கையில் தேற முடியுமா, உருப்பட முடியுமா என்று நான் தயங்கவில்லை. ஒடுகிற வெள்ளத்தில் குதித்தாகிவிட்டது. நீந்தித்தான் ஆகவேண்டும். எதிர் நீச்சல் போட்டுத்தான் ஆக வேண்டும். தண்ணிரைக் குடித்துத்தான் ஆகவேண்டும். தவித்துத் தத்தளித்து கரையேறத் தான் வேண்டும். இப் படித்தான் ஆயிற்று என் வாழ்க்கை.

எழுதிக் கொண்டே இருப்பது, சிந்தித்துக் கொண்டே இருப்பது, புத்தகங்களைப் படித்துக் கொண்டேஇருப்பது , என்பதுதான் என் முழு வாழ்க்கையாக அமைந்தது.

ஒரு விளையாட்டுப் புத்தகம் என்பது, 8 ற் பனையில், அழகாக வார்த்தை ஜாலமிட்டு எழுதுகிற புத்தகம் அல்ல. அது, எல்லாம் உலகம் ஒத்துக் கொண்டிருக்கும் விதிமுறைகள், நுண்முறைகள், ஒழுங்கு முறைகள் கொஞ்சமும் வழுவாது, நழு வாது, தவறாது, குறை யாது உள்ளது உள்ளபடியே எழுதப்பட வேண்டிய புத்தகம்.

அதனால், என் பொறுப்பு இரட்டிப் பாகப் போனது. காய்ந்த வைக்கோலைத் தின்று விட்டு, சுவையான பாலைக் கொடுக் கிற பசு மாட் டைப் போல, கடுமையான விதிமுறைகள் கொண்ட விளையாட்டைப் பற்றி படிப்பதற்கு சுவையாக எழுதுகின்றன. பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.

அதை நான் எனக்குள் கஷ்டமாகக் கருத வில்லை. இரவும் பகலும் சிந்தித்து சிறப்பாக படைக்க வேண்டும் என்ற சிரத்தையில் தான், இந்த எழுத்துத் தொழிலை ஏற்றுக் கொண்டேன். அதற்குமேல், நானே புத்தகங்களைப் பதிப்பிக்க முயன்ற போது தான், நான் நிறைய அவமானங்களை யெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த அவமானமும் , ஆக்ரோஷமும்தான் என் எழுத்து வேகத்தை விரைவுபடுத்தின.