பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 180

தகுதிகள் பெற்றிருந்தும், நான் எதிர்பார்த்த வரவேற்பும், கொஞ்சமான மரியாைைதயுங்கூட எனக்குக் கிடைக்கவில்லை என்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது.

நான் விளையாட்டுத் துறையில் புத்தகம் எழுதியதுதான் அந்தக் காரணம். அவர்களிடம் நான் போய் நின்று, வியாபாரியாகப் பேசியது தான். அவர்கள் விவரம் புரியாமல் நடந்து கொள்ள ஏதுவாயிற்று.

இங்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். நான் எப்படிப்பட்ட அவமானங்களைத்தின்று ஜீரணத்திருக்கிறேன் என்பது புரியும்.

சிவகாசியில், உடற் கல்வி ஆசிரியர்கள் மகாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குப் பொறுப்பேற்று நடத்திய ஒருவர், எனக்கு ஒரு கடிதம் எழுதினார், மாநாட்டுக்கு நீங்கள் வரவேண்டும். உங்களையும் உங்கள் புத்தகங்களையும பார்க்க, எங்கள் பகுதி ஆசிரியர்கள் ஆசைப்படுகின்றார்கள! என்று இதுபோல மூன்று நான்கு கடிதம் எழுதிவிட்டார்.

என்னால் பதில் எழுதி ஒப்புதல் அளிக்க முடியாத சூழ்நிலை. கடைசியில் மாநாட்டுக்கு நானும் புறப்பட்டு விட்டேன். சிவகாசியில், ரயிலை விட்டு இறங்கும்போது இரவு 11 மணி.

ரயில் நிலையத்தில் மண்டல உடற்கல்வி ஆய்வாளர்கள் (R.I.P.E.) நான்கு பேர்களைப் பார்த்தேன். அவர்களுடன், மாநாடு நடக்கிற பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தபோது இரவு 12 மணி.

மாநாட்டுக் குப் பொறுப்பேற்றிருந்த திரு கார்மேகம் (R.I.P.B.) எங்களையெல்லாம் வரவேற்றார். மண்டல உடற் கல்வி ஆய்வாளர்களுக்கு, தங்க ரூம் கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன ஒரு லாட்ஜில்.