பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | 84

கொள்ளவில்லை.

தமிழ் கூறும் நல்லுலகம் என்னை ஏற்றுக் கொண்டது. எனது புத்தகங்களை பொது நூலகங்கள் வாங்கிக் கொண்டன. இந்த ஆறுதலால்தான் நான் அதிகமாகவும் எழுதினேன்.

என்னால் இவ்வளவு வேகமாக எழுதமுடிந்தது என்றால் அந்த சூட்சமம் தான் என்னை சூத்ரதாரியாக்கி செயல்படச் செய்தது.

நான் எங்கேயாவது போய் மனதுக்குப் பிடிக்காத காரியம் நடந்து, அவமானம் என்கிற அநியாய சூழ்நிலை என்று நடந்துவிட்டால், உடனே வீட்டுக்கு வந்துவிடுவேன். கவலைப் படுகிற மனதை, நான் மாற்றுவதற்காக, உடனே எழுதத் தொடங்கி விடுவேன். கை வலிக்கிற வரை, உடல் சோர்ந்துபோகிறவரை, எழுதிக் கொண்டே யிருப்பேன். அதற்குப் பிறகு அப்படியே படுத்துத் துங்கிவிடுவேன்.

அவமானங்களும் சோதனைகளும் நேர்கிற பொழுதெல்லாம், நான் எழுதத் தொடங்கி விடுவேன். நான் நிறைய எழுதியது எல்லாம் அவமானப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில்தான்.

நான் கடுமையாக, பல மணி நேரங்கள் தொடர்ந்து (அது இரவோ பகலோ எந்த நேரமாக இருந்தாலும்) எழுதிக்கொண்டே இருக்கிறேன் என்றால், எனக்கு எதுவோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் என் மனைவி தெரிந்து கொள்வாள்.

விடாமல் தொடர்ந்து எழுதுகிறபோது, என் மனத்தின் அழுத்தம் குறைந்துவிடும், தூங்கி எழுந்தவுடன், மீண்டும் புத்துணர்ச்சியுடன் மற்ற வேலைகளை ஆரம்பித்துவிடுவேன்.

சில சமயங்களில் வெளியுலகத்தைப் பார்க்க