பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

{ விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி | 9()

கடைக்கு வருகிறவர்கள் சத்தம் எப்போதும, ஜாம் ஜாம் என்றிருக்கும். சில சமயங்களில் செருப்புச் சண்டை சூடுபிடித்துக் கொள்ளும்.

அந்த அலி மா கோல் டு கவரிங் கடைகளில் 40க்கும் மேற்பட்ட ஆட்கள் வேலை செய்தார்கள். அவர்கள் பகலிலும் இரவிலும் பேசுகிற பேச்சும், பாடுகிற பாட்டும், திட்டும், கேட்கச் சகிக்காது. என்றாலும், இந்தச் சூழ்நிலை எனக்கு எழுத்துக்கு மட்டும் ஏற்றதாக இல்லாமல் , எனது புத்தக வியாபாரத்திற்கும் பெரிய உதவியாக இருந்தது.

ரெங்கநாதன் தெருவில் குடியிருக்கிறேன் என்பதே எனது எழுத்துத் தொழிலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்டாக இருந்தது.

வீட்டிற்குள் விருப்பம்போல் போகமுடியாது. செருப்புக் கடையில் இருக்கும் கூட்டத்தைப் பொறுத்தே அது அமையும். எனது ராஜதுத் மோட்டார் சைக் கிள், அந்தக் கடை இரவு மூடுகிற வரைக் கும், வெளியிலேதான் நிற்கும். அதாவது உஸ்மான் ரோட்டு, சாலையிலே, அநாதையாக நிற்கும், இரவு 11 மணிக்கு மேலேதான், மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் கொண்டுசெல்ல முடியும்.

இதற்காக, இந்த நேரம் வரை விழித்துக் கொண்டு

காத்திருப்பதும், எனக்குப் பழக்கமாகிவிட்டது.

இந்த நேரத்தை எப்படி போக்குவது என்பதாக நினைத்து நான் எழுதத் தொடங்கி விடுவேன். எனக்குத்தான் எழுதவேண்டிய தலைப்புகள், ஏராளமாக இருந்தனவே!

இப்படி எல்லாவிதமான கஷடமான சூழ் நிலைகளே, என்னைக் கட்டியங்கூறி வரவேற்ற காலத்தில்தான். எனது எழுத்துவேகம் கரைபுரண்டு ஓடியது.

டி. வி. எஸ் கம்பெனியில் , செய்து கொண்டிருந்த