பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

புத்தகம் வித்து பணம் வந்தாதான் வீட்டுல சாப்பாடு நடக்கும். முன்ன மாதிரி என்ன டி.வி.எஸ் கம்பெனி சம்பளமா வருது: நமக்கு எதுக்குங்க இந்த வம் பு என்று மனைவி, மிக சாதுர்யமாக, சத்தம் போடாமல், எனது வாழ்க்கை நிலையை விமர்சனம் செய்துவிட்டு, அடுப்படிக்குப்போய் விட்டாள்.

நினைத்துப் பார்த்தேன்நான், நான் போட்டிருக்கிற சவால், இந்தப் பிறவியில் நடக்கக்கூடிய காரியமா? நடைபெறும் சாத்தியமா?

ரெங்கநாதன் தெரு வில் , வீதியிலே போடு கிற கடைக்குக்கூட, ஆயிரமாயிரமாக ரூபாய் கொடுத்தால்தான் இடமே கிடைக்கும், தெருவில் உள்ள கடைக்கே 3 அடிக்கு 3 அடி என்றால், ஆயிரக்கணக்கில், பகடியாக பணம் கொடுக்க வேண்டும். ஒரிஜினலாக கடை எடுக்கவேண்டுமென்றால் நான் என்ன செய்வேன்? பணத்திற்கு எங்கே போவேன்! மனம்

குழம்பியது!

ஒரு பக்கம் தலைவலி என்பதுபோய் இரண்டு பக்கமும் தலைவலி திருகுவலியாக வந்தது போல, நான் மாட்டிக்கொண்டேன். வேறு வழி?