பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

வியாபாரம் என்பது வியாபித்திருக்கின்ற பெரிய பாரம் - சுமை என்று எனக்கும் தெரிந்ததுதான், அதனால்தான் புத்தக வியாபாரத்தில் வெகு ஆர்வமாக ஈடுபட்டேன். வியாபாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கதை உண்டு.

ஒரு வயதான வியாபாரி, மரணப் படுக் கையில் கிடக்கிறார். அவர் படுத் திருந்த கட்டிலைச் சுற்றி அவரது மனைவி அவரது 6 மகன்கள் அழுதபடி நிற்கின்றனர். கடைசி மூச்சுக்காக கவு டப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் கிழவர், கண்விழித்துப் பார்க்கிறார். அவரது மகன்களைப் பார்க்கிறார். அவரது விழிகள் என்ன சொல்கின்றன என்று புரிந்து கொண்ட அவரது மனைவி, நம்ம பசங்க எல்லாமே வந்துட்டாங்க என்று அவருக்கு ஆறுதல் வரும்படி பேசுகிறார்.

அந்தக் கிழ வியாபாரி, தன் கடைசிப் பேச்சாக, என்ன பேசினார் தெரியுமா? எல்லாரும் இங்கே வந்துட்டீங்களே கடைய யாருப்பா பாத்துக்குவாங்க என்றாராம்.

தன் மரண நேரத்திலும், தன் கடையையும் வியாபாரத்தையும் தான் நினைத்துக் கொண்டிருந்த கிழவரை, மனைவியும் மக்களும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள் என்பது

ஒரு கதை. -

வியாபாரம் செய்கிற யாருமே, அதில் முன்னேறிய எவருமே, இப் படித்தான் வாழ் நாட்களைக் கழித்திருக்கிறாாகள். உண்ணும் போதும், உறங்கும் போதும், கனவிலும் நினைப்பிலும், உறவிலும், பகையிலும் கூட, தங்கள்

வியாபாரத்தைத் தான் நினைத்து, உழைத்திருக்கிறார்கள்.

இப் படி இல்லாத ஆட்கள்தான், கவுடத்திலும், நஷடத்திலும் உழன்று காலாவதியாகியிருக்கின்றனர்.

அதனால் தான், நிறைய படித்தவர்களும், கொஞ்சம் உழைக்கப் பயந்தவர்களும், உல்லாசமாய் வாழ்க்கையை ஒட்ட