பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 198

மரியாதை நிமித்தம் பார்க்க வந்தவர்.

நான் தங்கியிருந்த வீட்டுக்கு எதிர்ப் புறத்தில், சித் ரா போட்டோ ஸ்டுடியோ இருக்கிறது. அதன் பொறுப் பாளராக இருக்கப் போறேன் என்று சொல்லி விட்டுப் போனார்.

அவரும் அடிக்கடி வீட்டுக்கு வர, நானும் ஒய்வு நேரத்தில் ஸ்டுடியோவுக்கு போய் உட்காா, என்று நாட்கள் ஒடிக் கொண்டிருந்தன. நமக்கு ஒரு சொந்தக் கடை இந்த ரெங்கநாதன் தெருவில் கிடைக் குமா? வாடகைக் குக் கிடைத்தாலும் வாடகையும் அட்வான்சும், பகடியும் (குட்வில்) நம்மால் தரமுடியுமா? என்கிற கேள்விகள், என் மனதுக்குள்ளே நமைச்சலை ஏற்படுத்த, அவற்றை சமாளித்த படியே அங்கே அமர்ந்திருப்பேன்.

அந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் ஒரு பள்ளியில், ஒவியராக பணியாற்றி வந்தார். அவர் அயல் நாடுகளுக்குப் போய், வேலை பார்க்க வேண்டும் என்பதில் வேகமாக இருந்தார்.

அவருக்கு இன்னும் ஒரு மாதத்தில் வேலை கிடைத்துவிடும். ஸ்டுடியோவை விற்பதற்கு அவர் முயற்சி செய்கிறார் என்பதை அறிந்தேன். இது 1976ம் ஆண்டு

நடைபெற்ற சமாச்சாரம்.

போட்டோ ஸ்டுடியோ அதனுக்குள்ளே இருக்கின்ற சாமான்கள், குட்வில் போன்ற எல்லாவற்றிற்கும் சேர்த்து 6000 ரூபாய் பேசி முடிக்கப்பட்டது. ஒரு மாதம் கழித்துப் பணம் தருகிறேன் என்றும் ஒப்பந்தம் எழுதப்பட்டது.

நானும் பணத்திற்கு பலபேரிடம் கேட்டேன் பயனில்லை.

பொது நூலகத்துறைக்கு புத்தகம் சப்ளை செய்த பணம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரூ 9000 வந்து சேர்ந்தது. மகிழ்ச்சியில்