பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 200

27. விளையாட்டுத் துறையில் தமிழ்

வளர்ச்சி

இதுவரை விளையாட்டுத் துறை நூல்களை எழுத வேண்டும் என்ற வேட்கையில், வெறியில், இலட்சிய தாகத்தில், இருந்த உத்தியோகங்களையெல்லாம் ராஜினாமா செய்துவிட்டு, அன்றாட உணவுக்கும் ஆளாய் பறக்கின்ற அனுபவங்களையெல்லாம் அனுபவித்த பிறகு, புத்தக வியாபாரியாக மாறி, கொஞ்சம் கொஞ்சமாக விருத்தி அடைந்து, ரெங்கநாதன் தெருவில் உள்ள வீட்டில் குடியேறிய பிறகு, புத்தக வியாபார நிலையம் ஒன்று வேண்டும் என்ற சவாலில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்தது வரை, உங்களுக்கு எழுதி இருந்தேன். மேலும்

சென்னையில் உள்ள ரெங்கநாதன் தெருவில், போட்டோ ஸ்டுடியோ ஒன்றை வாங்கியது பற்றி, எனக்கு வானாளாவிய சந்தோஷம். உலகமே என் கையில் கிடைத்ததுபோல திருப்தி, ஏனென்றால், வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு, வறுமைக் கோட்டிற்கு மேலாக இருந்து கொண்டு, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த எனக்கு, வியாபாரக் கோட்டையாக விளங்கும் ரெங்கநாதன் தெருவில், வாடகை வீடு கிடைத்ததே பெருமையாக இருந்தது.

அந்தத் தெருவில் ஒரு நாளைக் கு ம்ை சக் ணக்கான அளவுக்கு மக்கள் வந்து போகிற கடை வீதிகள் உண்டு,