பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

சாதாரணமாக, அந்தத் தெருவில், ரோட்டில் சிறிய கடை ஒன்று வைக்க வேண்டும் என்றால், அரசியல் சிபாரிசு மட்டுமல்ல, ஆயிரக்கணக்காக பணம் செலவு செய்ய வேண்டும், பகடி, வாடகை என்று உண்டு.

வீதிக்கே இவ்வளவு வேண்டும் என்றால், கட்டிடம் உள்ள கடை என்றால், எவ்வளவு மதிப்பும் மரியாதையும் உண்டு?

அந்தத் தெருவிலே குடியிருக்க வீடு, புத்தகம் விற்க ஒரு கடை என்றால், சந்தோஷம் இருக்காதா? வாடகைக்கு கடை என்பதற்கே இப் படி வானளாவிய சந்தோஷம் என்றால், சொந்தக் கடையாக இருந்தால் எப்படி இருக்கும்.

இப் போது அந்தக் கடையை சொந்தமாக வாங்கி இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், விளையாட்டுத் துறை நூல்களை விற்க முடியாது, எழுதுகிற நீ விளங்க மாட்டாய் ! என்று விசுவாமித்திர சாபம் கொடுத்த எனது எதிரிகள், மனம் மகிழவே இந்தத் தகவலை இங்கே தெரிவித்தேன். வேறொன்றுமில்லை.

போட்டோ ஸ்டுடியோவை பகடி கொடுத்து அட்வான்ஸ் கொடுத்து, மாதம் 300 ரூபாய் வாடகை என்று, வாங்கி விட்டேன். ஆனால், போட்டோபிசினஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியாதே!

டி. வி. எஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டோ கடையின் முதலாளியாக அமர்ந்து கொண்டு, வருகிறவர்களிடம் புகைப்படம் பற்றியும், எனது புத்தகங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பது, எனது வாடிக்கையான தொழிலாகி விட்டது.

புத்தகம் விற்க ஒரு இடம் என்ற திருப்தி தான் எனக்கு ஏற் பட்டது, பணவரவுதான் இல்லை. போட்டோ கடை ஊழியர்களுக்கு, சம்பளம் தரக் கூட முடியாத அளவுக்கு