பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

-

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

பிசினஸ், என்றாலும் என் எழுத்துத் தொழிலை நிறுத்தவில்லை.

எழுதுவது, அதுவும் விளையாட்டுத்துறை பற்றிய நூல்களை எழுதுவது என்பது வாழ்க்கையாகவே அமைந்துவிட்டது.

என்ன செய்யலாம் என்று நான் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே, அந்தப் போட்டோ கடையை மூடிவிடுவதுபோல, ஒரு நிகழ்ச்சி நடந்துவிட்டது.

ஊட்டியில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்காகச் சென்று திரும்பிய நான் காலை 8 மணி அளவில் வீட்டில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் பரபரப்புடன் என் பெயரைக் கேட்டுக் கொண்டு வந்தார். நான்தான் என்று அறிமுகம் செய்துகொண்டேன்.

அறிமுகம் இல்லாத அந்த மனிதரை, நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவரது கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. இதோ வந்துவிடுவோம் என்பதுபோல கண்ணிர் வெளியே வர ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.

இனிமேல் நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியுமா சார்? என்ற அவரது படபடத்த பேச்சு, எனக்கு

ஆச்சரியமாக இருந்தது.

அவரை அமரச் செய்வதற்குள் எனக்கு பெரிய பாடாய் போயிற்று. பொறுமையாகப் பேசுங்கள் எனக் குப் புரியவில்லை என்றேன்.

நீங்கள் தானே ஸ்டுடியோ ஒனர் என்று கேட்டார். ஆமாம் என்றேன்.

இதென்ன சார் நியாயம் என்றார், அவரது குரலில் கோபம்

கூடிக்கொண்டே வந்ததைக் கவனித்தேன். அவரே பேசட்டும் என்பதுபோல, நான் அவரது கண்களையே பார்த்துக்