பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 204

கேமிராக்கள், விளக்குகள், மற்றும் முக்கியமான பொருட்களை, எல்லாம் விற்று விட்டேன்.

கோபத்தில் நவு டத்திற்கு விற்றுவிட்டேன் என்று நினைக்காதீர்கள். வாங்கிய விலைக்கு மேலே லாபத்திற்குத் தான் விற்றேன்.

மாடு வைத்துப் பால் வியாபாரம் செய்தேன். ஒரு பால்காரனை நம்பி. சைக்கிள் கடை வைத்து நடத்தினேன். ஒரு தெரிந்தவனை நம்பி.

நான் இருந்து செய்யாத எல்லா தொழிலுமே, விருத்தியாவதுபோல் வளர்ந்து, நல்ல பலன் தரும் நேரத்தில் நவrடமாகிவிட்டன. அதுபோலவே, நாடகத் துறையிலும் ஒரு குழுவையே வைத்து என்னென்னமோ முயற்சிகள் செய்தேன். அதிலும் தொடர்ச்சி இருந்ததே தவிர, வளர்ச்சி இல்லை.

இத்தகைய அனுபவங்கள் எல்லாம் எனக்கு ஒர் உண்மையை உணர்த்திக் காட்டியது. விளையாட்டைச் சார்ந்த எந்தத் தொழிலை நான் செய்தாலும், அதில் வளர்ச்சியும், எழுச்சியும், மலர்ச்சியும் மிகுந்தே வந்தது.

ஆனால், விளையாட்டுச் சம்பந்தமில்லாத, ஆனால் எனக்கு ஈடுபாடுள்ள மற்ற வேலைகளைச் செய்தாலும், அவை மங்கி மழுங்கித் தான் போயின.

ஆகவே நான் அன்று முதல் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். கலையோ, தொழிலோ, வியாபாரமோ எதுவாக இருந்தாலும், விளையாட்டை அடிப்படையாக வைத்துத்தான் செய்ய வேண்டும் என்று மேற் கொண்ட முடிவுதான். விளையாட்டுக் களஞ்சியம் பத்திரிகையை வளர்த்தது. இன்று சினிமா எடுக்கும் முயற்சியும் தந்தது.