பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 206

வடிவம் பெற்ற முறைகளில், விளையாட்டு நூல்கள் எதுவும் எழுதப்படாமலே இருந்து வந்தது.

ஆங்கிலேயர் வரும் வரை, ஆதிகாலத்தில் இருந்து தமிழகத்தில் தோன்றிய சிறு சிறு விளையாட்டுக்கள், கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள், மரபு வழியாக, வாய்ப் பேச்சு மூலமாக, கற்பிக்கப்பட்டும் பாரம்பரிய முறையிலேதான் பின்பற்றப்பட்டும், ஆடப் பெற்றும் வந்தன.

தனித்தனியே, இருவர் மூவர் என்று ஆடி வந்த குழு விளையாட்டுக்கள் ஒரு சில இருந்த போதிலும், சடுகுடு ஆட்டமே பெரிய விளையாட்டாக, பிரபலமாகி இருந்தது.

அந்த விளையாட்டில் பாடப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாடல்கள் கூட, பரம்பரையாக, வாய் வழி இலக்கியமாக தொடர்ந்து வந்தனவே தவிர, ஏட்டில் பதிந்த இலக்கிய வடிவம் பெற வில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக, நான் உடற்கல் வித் துறையில் ஆய்வாளராக அனுமதிக்கப்பட்டு, தமிழ் நாட்டு சடுகுடுப் பாடல்களும் சடுகுடு ஆட்டமும் என்ற தலைப்பில் ஆய்வு செய்தபோது தான், தமிழ் நாடு முழுவதும் பயணம் செய்து, நாடோடிப் பாடல்களாக விளங்கிய சடுகுடு விளையாட்டுப் பாடல்களை, ஏட்டில் பதிவு செய்து நூலாக்கினேன்.

தமிழில் ஒரு சிலர் விளையாட்டு நூல்கள் எழுத முயன்று, ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதி, விளையாட்டு நூல் என்று வெளிக் கொணர்ந்தனர் என் று முன்பே எழுதியிருந்தேன்.

இன்னும் சிலர், எழுத முயன்று இயலாது போயினர். எழுதியவர்கள் தொடர முயன்று தோற்றுப் போயினர். எழுதிய பலர், நூலாக ஆக்க இயலாமையின் காரணமாக, எழுதியதை பரணில் போட்டு, பதைபதைப்புடன் பணிந்து போயினர்.