பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 19

என்றார். குழந்தை நாதன் அவர்கள்.

அவரது நினைவாற்றலை வியந்தபடி மெளனமானேன்.

நீங்கள் அழகப்பா உடற்கல் விக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, உங்கள் கல்லூரி நடத்திய கட்டுரைப் போட்டிகளின் தாள்கள் எல்லாம், என்னிடம் தான் மதிப்பெண்கள் போட தரப்பட்டன. அந்தக் கட்டுரைகளில் ஒன்று, மிகுந்த அழகு தமிழில், சிறந்த கவிதை நடையில் எழுதப் பட்டிருந்தது. அந்தக் கட்டுரைக்கு நான் முதல் பரிசுக்குரிய மதிப்பெண்கள் கொடுத்ததோடு மட்டும் நின்று விடாமல், கட்டுரை எழுதிய மாணவர் யார் என்பதையும் அறிந்து கொண்டு, உங்களை நான் வந்து சந்தித்தேன். இந்த நிகழ்ச்சியாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா என்றார்!

ஆமாம்! உங்களை நான் சந்தித்தபோது, நீங்கள் கேட்ட முதல் கேள்வியும் நினைவுக்கு வருகிறது என்றேன்.

சிரிப்புடன் என்னைப்பார்த்தார்.

இவ்வளவு நல்ல தமிழ் எழுதுகிற நீங்கள், ஏன் விளையாட்டுத்துறைக் கல்வியைப் பயில வேண்டும்? இப்பொழுதும் ஒன்றும் நாளாகி விடவில்லை. வந்து கலைக் கல்லூரியில் தமிழ் எம்.ஏ. வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றீர்கள்.

உங்கள் அழைப்புக்கு நன்றி தெரிவித்து விட்டு, விருப்பமான விளையாட்டுத்துறை பயிற்சியையே முடித்து விடுகிறேன் என்றேன் நான், என்றும் நினைவுபடுத்திக் கூறினேன். :

| பரவாயில்லையே! தமிழ் படிக்கத்தானே உங்களை நான்

அழைத்தேன். இப்பொழுது அதே கல்லூரிக்கு, உடற்கல்வி இயக்குநராக வருகிறீர்களே! நல்ல ஆசைகள் நாட்களா