பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

தேவையான சொற்களைப் பெய்து, அருவி நடை, அமுத நடை, தெளிந்த நடை, படிப்பாரைப் பிணிக்கும்.நடை, பண்டிதத்தமிழ், பயிலும் நடை என்பார்களே! அப்படி எழுதுகின்ற ஆற்றல் வேண்டும். தமிழர் தம் கருத்தையும் கவனத்தையும் கவர்கின்ற நூல்களுக்குத்தான் வரவேற்பு இருக்கும். அப்படிப்பட்ட அழகு நடை வேண்டும்.

3. அனைத்து விளையாட்டு நூல்களும், ஆங்கிலத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. கண்டு பிடித்தாலும், காசு கொடுத்து வாங்கும் எல்லைக் குள்ளே இல்லாததும், விரும்புவோரால் வாங்க முடியாத பொருளாதார நிலையும், முக்கியத் தடைகளாகவே இருந்தன. இருக்கின்றன. இன்றும்.

4. அவசரம் மிகுந்த இந்த நாகரீக காலத்தில், வாழ்க்கையை எப்படியாவது அனுபவித்தேத் தீர வேண்டும் என்ற வேகமும் வெறியும் எந்த வயதினருக்கும் இருப்பது இயல்புதான்.

அப்படிப்பட்ட ஆவேச சூழ்நிலையில், ஒரிடத்தில் அமர்ந்து, ஆழ்ந்து படிக்கவும், குறிப்பெடுக்கவும், புதிய சொற்களை உருவாக்கவும், பொறுமையுடன் எழுதவும் கூடியவர்கள் இருப்பார்கள் என்றாநினைக்கின்றீர்கள்! அதுவும் ஒடி விளையாடுகின்ற செயலைப் பற்றி, உட்கார்ந்து எழுத யார் முனைவார்கள்? எழுதி மகிழ்வார்கள்?

இவ்வளவு இன்னல்களுக்கிடையையுேம் எப்படியோ ஒரு புத்தகத்தை எழுதிவிட்டால், அதைப் பதிப்பிக்க வேண்டிய செலவுகளோ அதிகரித்து தலைக்கு மேலே வந்து கனமாய் கனக்கிறது. அதையும் சமாளித்துக் கொண்டு ஒரு வித ஆற்றலோடு புத்தகத்தைப் பதிப் பித்து விட்டால், அதை விற்பதற்கு எத்தனை போராட்டங்களை சந்தித்தாக வேண்டியிருக்கிறது!

இந்த விளையாட்டுப் புத்தகத்தை வாங்கி விற்க எந்த விற்பனையாளரும் முன் வருவதில்லை. முகத்திற்கு நேரே