பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- { விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 2 . ()

எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டு, சொன்னவற்றைக் கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு சோகமான சூழ்நிலைக்கு எழுத்தாளர்கள் ஆளாகி விடுவதால் தான், எழுத்தாளர்கள் புத்தகம் போடவே முயற்சிப்பதில்லை.

பொதுவாக வியாபாரிக்கு மானம், ரோஷம் இருக்கக் கூடாது என்பது என் எண்ணம். நான் எழுதிய புத்தகங்களை விற்க போன போது ஏற் பட்ட அனுபவம் தான், இப் படி எழுத வைக்கிறது.

அப் படி என்ன யாருக்கும் ஏற்படாத சந்தர்ப் பங்கள், சங்கடங்கள், சஞ் சலங்கள் என்று கேட்கலாம். இதை உங்களுக்கு நான் சென்னால், உண்மை நிலை புரியும் .

உடற்கல்வித் துறையிலே நான் கொஞ்சம் அதிகமாகவே படித்தவன், அதிகமாகவே பட்டங்களை வாங்கியவன்.

உடற் கல் வித் துறையிலே யாரும் வகிக் காத உயர்ந்த பதவிகளை வகித்தவன். அதிகமான சம்பளம் வாங்கியவன். பேரும் புகழோடும் இருந்தவன்.

அத்தகைய பல பெரிய பதவிகளையே வேண்டாமென்று துக்கி எறிந்து விட்டு, உடற்கல்வித் துறைக்காகவே என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவன், எழுத்தையே நம்பி வாழ்ந்தவன்.

ஆக, நானே போய் புத்தகம் விற்கச் சென்ற இடத்திலெல்லாம், என்னை விட விளையாட்டிலும் , அறிவிலும், அனுபவத்திலும், ஆற்றலிலும் கொஞ்சம் இளையவர்களை நேரிலே நான் சந்திக்க வேண்டியிருந்தது.

நான் ஏகப்பட்ட மரியாதையை யாரிடமும் எதிர் பார்க்கவில்லை. ஒரு சின்ன வியாபாரிக்கு கொடுக்கப்படக் கூடிய சொற்ப மரியாதையைத்தான் நானும் எதிர்ப் பார்த் தேன். அதுவும் சில இடங்களில் எனக் குக் கிடைக்கவில்லை என்கிற போது தான் மனம் நொந்து