பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 212

ஆரம்பித்தேன். என்புத்தகத்தை எந்த அச்சகத்தாரும், பதிப்பிக்க முன்வரவில்லை என்ற காரணத்தால் இங்கே ஒரு அச்சகத்தையே நான் தொடங்கினேன்.

இதற்காக என்னுடைய பதவி, ஊதியம், வேலை ஆகியவற்றைத் தூக்கி எறிந்து விட்டு, வெளியே வந்தேன். ஆக, என்னுடைய லட்சியம் 100 புத்தகங்களையாவது எழுதி முடித்து விட வேண்டும். அந்த ஒரு லட்சியத்தை முன் வைத்துத்தான், சென்னைக்கு வந்த நான், 100 புத்தகங்களை முடித்த பின்தான், எனது இன்னொரு லட்சியமான விளையாட்டைப் பற்றி சினிமா எடுக்கும் தொழிலில் ஈடுபட்டேன். அதன்படி 100 புத்தகங்களை எழுதியிருக்கிறேன். அவற்றை பதிப்பித்திருக்கிறேன்.

சினிமாவும் தயாரித்து, 1994ம் ஆண்டு ரிலீஸ் செய்திருக்கிறேன்.

விளையாட்டுக் கலைத்துறையில் பொது மக்களின் கவனத்தை ஈர்த்து விட் வேண்டும் என்ற அதே லட்சியத்திற்காக, 100 புத்தகங்களை எழுதி முடித்த பிறகே ‘ஒட்டப்பந்தயம் என்ற சினிமா படத்தையும் எடுத் தேன். என்னுடைய இலட்சியத்திற்காக மற்றவர்களுடைய பணத்தைப் போட்டு சோதனை செய்ய நான் விரும்பவில்லை. ஆகவே நான் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து, கடன் வாங்கி, நானே முழு பொறுப்பேற்று படத்தை வெளிக் கொணர்ந்தேன்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு, தயாரிப்பு, நடிப்பு, பின்னணி, இயக்கம், விநியோகஸ்தர் என்று அத்தனை பொறுப்புக்களையும் ஏற்றிருந்தேன். நான், இந்தப் படத்தை எடுத்ததில் வெற்றி பெற்றேன் என்பதைக் காட்டிலும் , என்னுடைய லட் சியத் தில் வெற்றி பெற்றுள்ளேன் என்பதில் தான் எனக்கு திருப்தி . முழு மகிழ்ச்சி.

ஆகவே, விளையாட்டுக்களைத் தமிழ் இலக்கியத்தில் இணைத்து எழுத வேண்டும் என்று முடிவு செய்த பிறகு,