பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 214

பொதுத் தேர்வு எழுதுமாறு, பங்கேற்கச் செய்து; 40,000 ரூபாய்க்கும் மேலாக பணப்பரிசும், புத்தகப் பரிசுகளும் தந்து, உடற் கல்வி விளையாட்டு இலக்கியத் தை, வீடு தோறும் கொண்டு போய் சேர்த்தேன்.

10. இசை நாடாக்கள் தயாரித்தேன். விளையாட்டின் பெருமை பற்றி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, புகழ் பெற்ற பாடகர்களுட்ன் நானும் பாடி, தயாரித்து வெளியிட்டேன். விளையாட்டு இசைப் பாடல்கள் என்ற கேசட் டும் , உடற் பயிற் சிக்காக வாத்திய இசை மூலமாக QLol sologig/, Instrumental Sports Music grgr p கேசட்டையும் உருவாக்கினேன்.

11. பொதுமக்கள், விளையாட்டின் மூலம் மகிழவும், நலவாழ்வு பெற்றுத் திகழவும் கூடிய வகையில், மாத இதழ் ஒன்றை 1977ம் ஆண்டு தொடங்கினேன். விளையாட் டுக் களஞ்சியம் என்ற மாத இதழ் மூலம், 22 ஆண்டுகளாகத் மக்களிடம் விளையாட் டு இலக்கிய சேவையை செய்து கொண்டு வருகிறேன்.

12. பள்ளிகளில் பொது மேடைகளில் விளையாட்டு இலக்கியச் சொற் பொழிவுகள் என, இதுவரை தமிழ் நாடு முழுவதும் 1000 மேடைகளில் சொற் பொழிவாற்றி

விளையாட்டு இலக்கியமே என் வாழ்வின் மூச்சாக, வாழ்வதற்குரிய பேச்சாக விளங்கி வருகிறது. விளையாட்டால் நானும், என்னால் விளையாட்டும், இலக்கியமும் வளர்ந்து கொண்டு வருகிறது என்பதை உங்களுக்கு விளக்கவே ஒவ்வொரு ஆண்டும் எப்படியெல்லாம் எழுதும் முயற்சிகளில் ஈடுபட்டேன் என்ற பட்டியலை கீழே தந்துள்ளேன்.