பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 25

இயக்குநராக இருந்தவர்., எம்.ஏ. இலக்கிய வகுப்பில் இடம் வாங்கி தருவது என் பொறுப்பு என்று உறுதி கூறியிருந்ததால், சென்னை சென்று படிக்கும் ஆர்வத்துடன், பி. ஏ. இறுதித் தேர்வு எழுதினேன்.

பி. ஏ. யில் முதல் வகுப்பில் தேறி விடுவேன் என்ற நம்பிக்கையோடு தேர்வு எழுதிய எனக்கு, ஆங்கிலத்தில் மதிப் பெண்கள் ஒரிரண்டு குறைந்ததால், தோல் வியே கிடைத்தது.

ஆகவே அந்த ஆண்டு, என் எதிர்ப்பார்ப்புக்கு, ஏமாற்றத்தை அளித்து விட்டது. சென்னையில் தமிழ் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் வேட்கையும் வீணாகி விட்டது.

தேர்வில் பெற்ற தோல்வி என்னை படிப்பின் மேலே ஒரு தேவையற்ற வெறுப்பினைத் தூண்டி விட்டதால். வேலை செய்யும் ஆசையை விட்டுவிட்டு, வேளாண்மைத் துறைப் பக்கம் போய் விடலாமா என்ற ஒரு சிந்தனையையும் சிலிர்த்தெழச் செய்து விட்டது.

என் தந்தையின் அன்பான ஆணை, அவர் வழிக்குத் திரும்பச் செய்தது. அதை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன்.

வாழ்க்கையில் பி. ஏ. படிப்பில் ஏற்பட்ட ஒரு தோல்வி எனது வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்றால், என் தந்தை கூறிய வார்த்தைகள், என் வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களிலே பெரிய திருப்பமாக ஆகிவிட்டது.

தோற்றுப் போன எனக்கு, என் தந்தை அன்று கூறிய வாசகங்கள் இன்றும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றன.

‘எட்டாவது படிக்கிறபோது, உன்னைப் படி என்று நான்