பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அடித்த போது, நான் எப்பொழுது தோற்கிறேனோ, அப்பொழுது என்னைக் கேட்டால் போதும் என்று நீ கூறினாய். இதுவரை நீ உனக்காகப் படித்தாய். நன்றாகவே படித்தாய். ஆனால், இன்று நீ தோற்று, துவண்டு போயிருக்கிற நிலையைப் பார்க்கிற போது, மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனது ஆசையை இப்பொழுது நான் கூறுகிறேன். இதுவரை நீ உனக்காகப் படித்தாய். இந்த ஒருமுறை மட்டும் எனக்காகப் படி பரிட்சை எழுது. தேர்வின் முடிவு பற்றி பிறகு பார்க்கலாம். ‘ என்று அறிவுரை கூறினார்.

அவருக்காகப் படித்த நான், அவர் நம்பிக்கையை மீண்டும் பெற, இரவு பகல் பாராமல், கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொண்டு, படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெற்றேன்.

உணவுக் கட்டுப்பாடு என்பது பி.ஏதேர்வு எழுதுகிற வரை, ஒருவேளை உணவுதான், எந்த நேரத்திலும் விளையாடி விளையாடி, உண்டு உண்டு மகிழ்ந்து, பொழுது போக்கிய கல்லூரி நாட்களையும்; தனித் தேர்வு எழுதுவதற்காக, என்னைநானே கண்டித்துக் கொண்ட சூழ் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வேன்.

இப்படியே ஒராண்டு கழிந்தது.

இதற்கிடையில் பல உத்தியோகங்களில் சேர்வதற்காக பல

தேர்வுகள். பல வாய்ப்புகள் ஏனோ தெரியவில்லை. வேண்டாமென்று விலகி வந்து விட்டேன்.

இரயில்வே பணியில் சேர்ந்து கொள் என்று விளையாட்டுப் பயிற்சியாளர் திரு தாமஸ் என்பவர் அழைத்த அன்பான வேண்டுகோள்- கேட்ட வேலையை கொடுக்க வில்லை என்று வாய்ப்பை ஒதுக்கிவிட்டேன்.