பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அதற்கான சந்தர்ப்பங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.

டிப்ளமோ பட்டம் என்பது D.P.E.D. நான் படித்த காலத்தில் முதுகலை ஆசிரியப் பட்டப் படிப்புக்கு சமானமாக அங்கீ கரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு குறைந்த அளவு கல்வித் தகுதி என்பது பி. ஏ. அல்லது பி.காம் என்பதாகும். ஒராண்டு காலம், விடுதியிலே கட்டாயமாகத் தங்கிப் படிக்கும் நிலைமை கொண்டது.

அப்போது சர்டிபிகேட் கோர்ஸ் என்றும், ஹையர் கிரேடு கோர்ஸ் என்றும் இருந்தன. இதில் பள்ளி இறுதி வகுப்பு படித்துத் தேறியவர்களும் (S.S.LC) அதில் பெயிலானவர்களும் சேர்ந்து படிக்கும் வகுப்பு சர்டிபிகேட் பயிற்சி, (C.P.E.D).

கல்லூரியில் பாடம் நடத்தப்படுவது எல்லாம், ஏறத்தாழ எல்லா நிலையிலும் ஆங்கிலமே இருந்தது. கல்லூரி பேராசிரியர்கள், தமிழில் பேசுவது தவறு என்பது போல எண்ணிக் கொண்டு, ஆங்கிலத்தில் சொல்லித் தருவது தான், அறிஞருக்கு அழகு என்பதாக விரிவுரையாற்றுவார்கள்.

ஆங்கிலத்தில் போதிய அறிவு இல்லாத காரணத்தால், மாணவர்கள் பலர் வகுப்பு நேரத்தில், மதிமயங்கிக் கிடப்பது வழக்கம். அதாவது சத்தமின்றி, ஆழ்ந்த நித்திரையில் இருப்பது வழக்கம்.

பிறகு, அடிக்கடி நடத்துகிற தேர்வு வருகிற போது, அலங்கோலமாக அலைந்து திரிந்து, அவதிப்படுவதும், பாடங்களைப் புரிந்து கொள்ள திண்டாடுவதும் வேடிக்கையாக இருக்கும்

எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவதால், ஆங்கிலப் பாடங்களைத் தமிழில் கற்றுத் தர வேண்டும் என்று,