பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தருவேன்’ என்று அவர் வாக்களித்தபடி, அழகப் பா கலைக்கல்லூரியில், ஒர் இடம் காலியான போது, அதற்கு என்னை விண்ணப்பிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி மனு செய்திருந்தேன். அதற்கான நேர்முகத் தேர்வுக்குத் தான் தான சென்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லி முடித்தேன் குழந்தைநாதனிடம்.

உங்களை எங்கள் கல்லூரி சார்பாக முன் கூட்டியே வரவேற்கிறேன். உங்களுக்கு இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்று, நம்பிக்கையுடன் பேசினார் அவர்.

நிரந்தரமாக அந்த கல்லூரியில நான் பணியாற்றுவேன் என்ற அவரது நம்பிக்கை, மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் மாறிப் போய்விடும் என்பதை அறியாமல், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கிக் கொண்டோம்.

ஆனால் நடந்ததோ வேறு.

எனக்குள்ளே இருந்த இலக்கியதாகமும் வேகமும், இ தமான இடம் கிடைத்த காரணத்தால், பல மடங்கு பெருகிப் பரிமளித்துக் கொண்டது. புதிய பரிணாமம் பெற்றது. புத்துணாச்சியுடன் புதிய கிளர்ச்சியையும் பெற்றது. இனி தொடருவோம்.