பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

3

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

கொண்டார். துணை இயக்குநரான திரு டாட் அவர்கள் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தத் துணை இயக்குநர் பதவிக்கு யாரும் வேண்டாம், ஒருவரே போதும் என்று கல்லூரி முதல்வர் முதலில் முடிவெடுத்திருந்தார். பின்னர், ஏதோ காரணத்தினால், ஒரு கட்டாயத்தினால், அந்தப்பணியில் ஒருவரை அமர்த்த முடிவு செய்தபோது, யாரை நியமிப்பது என்பதில் சிக்கல் எழுந்தது.

கல்லூரி முதல்வர், தனது உறவினர் ஒருவருக்கு அந்த வாய்ப்பினை அளிக்க முன்வந்தார். அழகப்பா உடற்கல்விக் கல்லூரியின் முதல்வர் திரு ராப்சன், அவரது கல்லூரியில் படித்து மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறியிருந்த எனக்கு சிபாரிசு செய்தார்.

அந்நாளில் அழகப்பா கல்லூரி நிறுவனங்களின் தாளாளராக இருந்த திருவாளர் சி. வி. சி.டி.வி. திரு வெங்கடாசலம் செட்டியார் அவர்கள், திரு. ராப்சனின் சிபாரிசினை ஏற்றுக் கொண்டு எனக்கு அந்தப் பணியைக் கொடுக்க முன்வந்தார். கலைக் கல்லூரி முதல்வரோ அந்த முடிவை ஏற்கவும் முடியாமல், தட்டவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக என்னை ஏற்றுக்கொண்டார்.

கொள்கை அளவில் என்னை ஏற்றுக் கொண்டாரே ஒழிய, மனத்தளவில் மறுப்புள்ளவராகவே இருந்தார். அதனால்தான், நேர்முகத் தேர்வும் எந்த விதமான விறுவிறுப்புமின்றி நடைபெற்று முடிந்து போனது.

கல்லூரியில் சேர்ந்த பிறகு தான், எனது நிலைமையும் புரிந்தது. கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று நானே முடிவு செய்து கொள்ள நேர்ந்தது.

இந்த சூழ்நிலைகளுக்கு இடையே தான் திரு குழந்தைநாதன் அவர்களுடன் ஏற்பட் நட்பு இனிதாக