பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

4

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

வளர்ந்து வந்தது.

எப்பொழுதும் அவரது தமிழ்த்துறை அறையில் அவருடன் இருப்பேன். அல்லது ஒய்வு நேரத்தின் போது, அவரே என்துறை அறைக்கு வந்து விடுவார்.

நான் தமிழில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எந்தக் கருத்தையும் நான் கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து பேசுவது, விவாதத்தில் கொண்டு வந்து விடும் என்பதால், நாங்கள் நீண்டநேரம் பேசுவதாகிவிடும்.

ஒரங்க நாடகங்கள் எழுதுவதும் அதிலும் நகைச்சுவை நாடகங்கள் எழுதுவதும் , பேராசிரியர் குழந்தைநாதன் அவர்களுக்கு கைவந்த கலையாக இருந்தது.

அழகப்பா கல்லூரியில், முத்தமிழ் விழா ஒன்று மிகவும் சீரும் சிறப்புமாக நடத்தப்படும். தமிழகம் எங்கிலுமுள்ள தரமுள்ள பேச்சாளர்களை, கவிஞர்களை, இசைக் கலைஞர் களை அழைத்து வந்து பேசச் செய்தும், பாடச் செய்தும், நடிக்கச் செய்தும், கல்லூரி வளாகமே கலைவிழா கோலமாகக் காட்சியளிக்கும்.

முதல்நாள் பேச்சரங்கம். இரண்டாம் நாள் கவியரங்கம்.

மூன்றாம் நாள் பட்டிமன்றம், ஒவ்வொரு நாள் இரவும் நாடகம் நடத்துவர்.

பொதுவாக நாடகம் நடத்துகிற பொறுப்பு திரு குழந்தைநாதன் அவர்களுக்கு அந்நாளில் இருந்தது. அவரது தமிழ்த் துறையில் பத்து பேராசிரியர்களுக்கு மேல் இருந்த போதும், அவருக்கு உதவி செய்ய என்னைத்தான் அழைத்தார்.

மற்ற தமிழ்த் துறையினருக்கும் அவருக்கும் கருத்து

வேற்றுமை இருந்தது எனக் குத் தெரியாது. அவர் உதவியாளராக என்னை அழைத்ததுமே, நான் மகிழ்ச்சியுடன்