பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

3

5

ஏற்றுக் கொண்டேன்.

நாடகம். இசை. கவிதை என்பவை என்னுள் பொங்கிக் கொண்டிருந்தபோது (1954-1958), நான் நடித்த நாடகங்கள் பற்றியும், பாடிய மெல்லிசை நிகழ்ச்சிகள் பற்றியும், எழுதிய பாடல்கள் பற்றியும் அவரிடம் கூறியிருந்தேன். அதனால் என்னை அவர் அழைத்து, கலைவிழா நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி விட்டார்.

இவ்வாறு குழந்தை நாதன் அவர்களுடன் நாடகங்கள் நடத்திய காரணத்தால், மாணவர்களிடையே பிரபலமாகும் சூழ்நிலை வளர்ந்தது.

ஏற்கனவே, விளையாட்டுக்களில் ஈடுபாடு நிறைந்த மாணவர்களுடன். கலை, இசை, கவியரங்கம் இவற்றில் ஈடுபாடுள்ள தமிழ்ப் பற்று மிகுந்த மாணவர்களுடனும் பழகும் வாய்ப்பு நிறையவே கிடைத்தது.

y இப்போது சென்னை பிரசிடென்சி கல்லூரி தமிழ்த் துறையில் பணியாற்றி வரும். தமிழ்ப் பேராசிரியர் சுவைமிகு சொற்பொழிவாளர் டாக்டர் இளவரசு என்பவர். அப்போது எம்.ஏ மாணவராகப் படித்தார்.

காலஞ் சென்ற தமிழக முதல் வர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய செளந்தர ராஜன் என்பவரும், அந்நாளில் தமிழ் பயின்ற மாணவரே.

இவ்வாறு தமிழ்த்துறை மாணவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு எனக்குள் இருந்த தமிழார்வத்தை மேலும் வளர்த்து விட்டது.

காலை மாலை நேரத்தில் டென்னிஸ் ஆட்டம். வேலை நேர தில் வேலை செய்த நேரம் போக, தமிழ் உரையாடல். இப்படி நாட்கள் நகர்ந்த போது, தமிழ் மீது பாசம் மிகுந்தது