பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 43

சரணாகதி அடைந்தேன் என்று கூடச் சொல்லலாம்.

அந்த புதிய இடம், புனித இடம், என்னை ஏந்திக் கொண்ட சரணாலயம் - நூலகம்.

காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில் நூலகத்தின் அமைப்பே ஒரு நூதனமானது தான். பல ஆயிரக்கணக்கான, பல்வேறு துறைகளைக் கொண்ட நூல்கள், வட்டவடிவமான அடுக்குகளில், வைக்கப்பட்டிருக்கும்.

உள்ளே நுழைந்துவிட்டால். உலகமே மறந்து போகும் அளவுக்கு அமைதியான சூழ்நிலை.

வேலை நேரம் போக, என் குடியிருப்பாக, அந்த நூல் நிலையம் அமைந்துவிட்டது. என்னைப் பார்க்க வேண்டும் என்று முயற்சிக்கின்ற பணியாளர்கள், பெரிய பரப்பளவுள்ள அந்தக் கல்லூரி வளாகத்தைச் சுற்றுவதற்கு முன், ஒரு முறை வந்து, நூலகரைப் பார்த்து விசாரித்து, ‘நான் நூலகத்தில் இருக்கிறேனா என்று விசாரித்து விட்டுத்தான் செல்வார்கள்.

அந்த அளவுக்கு, நூல் நிலையம் என்னை ஆட்கொண்டு விட்டது. கல்லூரி நேரத்தில் தான் இந்தக் கதி என்றால், வீட்டிற்கு போன பிறகும் இந்த படிக்கும் வேலை என்னை விடவில்லை.

படிப்பது, குறிப்பெடுப்பது என்னும் வேலை, சில சமயங்களில் இரவு ஒரு மணி வரை தொடரும். இதற்கு முன்னதாகத்துங்க முயற்சித்தால், படித்த நூல்களில் கிடைத்த பிடித்தமான கருத்துக்கள், சிந்தனையாய் சிலிர்த்தெழுந்து, ரீங்காரமிட்டுக் கொண்டேயிருக்கும், எப்படி தூங்குவது?

இதன் தொடர்ச்சி என் குடும்பச் சூழ்நிலையையே

கலக்கிவிட்டது என்றே கூறலாம். இது என்ன படிப்பு என்று என் மனைவியே எரிச்சல் பட்டு, புத்தகத்தைப் பிடுங்கி