பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 45

வேண்டாம். என்னிடம் பேசவும் வேண்டாம் என்று நண்பர் குழந்தைநாதன் அவர்கள் முகத்தில் அடித்தாற் போல் என்னிடம் பேசி விட்டார்.

எனக்கும் என்னவோ போல் தான் அந்தச் சூழ்நிலை இருந்தது. எதையாவது தமாஷாக பேசிப் பொழுதைக் கழிக்கலாம் என்று போன எனக்கு அவர் பேசியது சங்கடமாகவே இருந்தது.

நானும் சட்டென்று திரும்பி என் அறைக்கு வந்து விட்டேன். அன்று நான் நூலகத்திற்கு செல்லவே இல்லை.

வீட்டிற்கு வந்தாலும் அதே நினைவு தான். மனைவியின் கேள்விகள் என்னை அவளிடம் நடந்ததை முறையிட வைத்தன.

‘கண்ட புத்தகங்களைப் படிக்காமல் விளையாட்டுத் துறை நூல்களைப் படித்தால் தானே புத்தகம் எழுத முடியும்.

என மனைவியிடமிருந்து இப்படி ஒரு ஆலோசனை. - யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

இது நடைபெற்றது 1962 ஆம் ஆண்டின் ஒரு நாள். சரி என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

விளையாட்டுத் துறை என்றால் அந்தத் துறையில் உள்ள பல நூல்களைப் பார்த்தாக வேண்டுமே!

தமிழில் தானே நூல்கள் எழுதப் போகிறோம். அதற்கு தமிழ் நூல்களே நல்ல வழிகாட்டும், உதவும் என்று தேடினேன். அப்படிப் பட்ட நூல்களே இல்லை என்று நூலகர்கள் கூறினார்கள். -

ஆக, நாம் எடுத்துக் கொள்கிற முயற்சி முதல் முயற்சியாக இருக்கிறது. இதை ஒழுங்காகச் செய்யவே இம் என்கிற

ரினைவு வங்கவ என் ாை:விக ப ாைர்வ வங் விட்