பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தமிழில் எழுதுவது.

Basket ball என்பதை பேஸ்கட்பால் என்று தலைப்பாகத் தந்திருந்தார். Throw என்பதை த்ரோ என்றும் Free throw என்பதை ப்ரீத்ரோ என்றும் Dribling என்பதை டிரிபிளிங் என்றும் இப்படியாக எல்லா சொற்களும் இருந்தன.

கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்தவர்கள் அல்லது அந்த ஆட்டத்தை அடிக்கடி ஆடிப் பழகியவர்கள் மட்டுமே, படித்துப் புரிந்துக் கொள்ள முடியும்.

எனவே, இந்த விதமாகப் புத்தகம் எழுதக் கூடாது என்பதை, அந்த புத்தகம் எனக்கு அறிவுரை வழங்கியது.

பெங்களுர் சுந்தரம் என்பவர் எழுதிய வனப்பும் வலிமையும் என்ற புத்தகம் மற்றுமொரு ஆரோக்கிய ரகசியம் என்ற புத்தகம் வி. என். குமாரசாமி எழுதியது. எல்லாம் உடற்பயிற்சி பற்றியும், யோகாசனங்கள் பற்றியும் விளக்கி எழுதப்பட்ட புத்தகங்கள்.

ஆகவே, எனக்கு உதவுவதாக எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை என்றாலும் எனது தேடும் படலம் நின்ற பாடில்லை. தீவிரமடைந்தது.

விளையாட்டுத்துறையினர் யாரைப் பார்த்தாலும், அல்லது தெரிந்தவர்கள் யார் வந்தாலும், பேச்சுக்கிடையே ஏதாவது, புத்தகம் இருக்கிறதா என்ற கேள்வி வந்துவிடும். இல்லை என்ற பதிலும் உடனே கிடைத்து விடும்.

கிடைக்குமா என்று கேட்டோமே என்ற திருப்தியுடன் நான் இருந்து விடுவேன். கிடைக்காத தோல்வி பற்றி நான் கலங்குவதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

இதற்கிடையில் அழகப்பா கலைக் கல்லூரி நூலகத்தில் பொது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கான புத்தகப்