பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

7. விலை கேட்டு சிலை!

, 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கல்லூரி வேலையில் பொழுது கழிந்து விடும். அதற்குப் பிறகு நாடக ஒத்திகை வேலைகள் நடக்கும். இரவு 9 மணிக்கு மேலே, புத்தகம் எழுதுவதற்கான எழுச்சி தொடங்கிவிடும்.

ஆரம்ப நாட்களில், தூக்கம் வந்து தொல்லை கொடுத்து, சிந்தனையைக் கூட துளிர்க்க விடாமல் செய்துவிடும். இதயத்திலே இருந்த இலட்சிய வேகம் மும்முரமாக இடம் பிடித்துக் கொள்ளக் கொள்ள, தூக்கம் தற்காலிகமாக இடம் பெயர்ந்து கொண்டது

_

திருமணம் நடந்து கொஞ்ச நாட்கள்கூட, ஆகவில்லை. புத்தகங்கள் படிப்பதும் குறிப்பெடுப்பதும், எழுதத் தொடங்குவதும் என்பதாக, இரவின் பெரும்பொழுது கழிந்து கொண்டது.

எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும் காலை 6 மணிக்கு, கல்லூரி மைதானத்திற்குச் சென்று விடவேண்டும் என்பது என் தொழில் கடமை, இதனால், எனது எழுத்துப் பணி தடுமாறியதாக எனக்கு நினைவே இல்லை. கண்விழிப்பது வேறு. காலையில் விழித்து, பணிக்குப் புறப்பட்டு விடுவது வேறு. இரண்டும் எனக்குச் சங்கடமாகத் தோன்ற வில்லை.

தமிழில் முதன் முதல் விளையாட்டுத் துறை ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதாமல், தமிழில் புதிய