பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

நீ இத்தனை நாள் எங்கே போயிருந்தாய், உன்னைக் காணவில்லையே என்று ஒருவர் கேட்க, அயலூருக்குப் போயிருந்தேன் என்று மற்றவர் சொல்ல, அந்த அயலூர் என்ற சொல் என் காதில் அழுத்தந் திருத்தமாக வந்து விழுந்தது.

கால் பந்தாட்டத்தில், ஆட்ட நேரத்தின்போது எதிராட்டக் காரர்களின் பகுதியில் தனியே போய் ஒரு ஆட்டக்காரர் நின்றால், அவர் அடுத்தவர் இடத்தில் இருக்கிறார் என்ற சொல்லுக்குத் தமிழில், எதிர்ப் பகுதி இடம், என்று சொல்லலாம் என்று நினைத்து, எந்த சொல்லைப் போடுவது, என்று குழம்பிக் கொண்டிருந்த போதுதான், இரண்டு ‘பேரிளம் பெண்கள் பேசிய பேச்சு எனக்கு உதவி செய்தது.

ஆகவே, offside என்ற சொல்லுக்கு, அயலிடம் என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கினேன். இப்படி புதிய தமிழ்ச் சொற்கள் எந்த நேரத்தில், எப்படி உருவாகும், எந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும் என்று தெரியாததால் தான்நான் மற்றவர்கள் சத்தமாகப் பேசுகிற உரையாடலையும் சொற்பொழிவு களையும், கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன்.

இப்படியாக, ஏறத்தாழ 500 சொற்களுக்கு மேல் தமிழில் புதிய சொற்களை உருவாக்கிக் கொண்டு 300 பக்கங்களுக்கும் மேலாக முதல் புத்தகத்தை எழுதி முடித்தேன். அதாவது 1961-ம் ஆண்டு தொடங்கி, 1964ம் ஆண்டுவரை, முதல் புத்தகம் எழுதும் வேலை தொடர்ந்தது.

நான் எழுதுகிற குறிப்புக்களை, அவ்வப்போது பேராசிரியர் குழந்தைநாதன் அவர்களிடம் காட்டி, அவரிடம் ‘சபாஷ் வாங்கிக் கொள்வேன்.

அவருடைய அறிவுரையை நான் ஆர்வமாகக் கேட்டு செயல்படுவது, அவருக்குப் பெருமையாக இருந்தது. அதனால் என்மேல் அவர் அதிகமான அன்பைப் பொழியலானார்.