பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

புத்தகம் போட முடியாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்து, நம்பிக்கை இழந்து நின்றபோது, ஒரு அழகான அழைப்பு வந்தது. ஏன் அழகான அழைப்பு என்றேன் என்றால், அந்த அழைப்பு விடுத்த இடம் அழகு பதிப்பகம் என்பதால் தான்.

‘தமிழ் இலக்கிய வரலாற்றிலே உங்கள் நூல் முதல் நூல். புதிய நூல் என்பதால், பதிப்பிக்க நான் ஒப்புக் கொள்கிறேன். இந்நூல் விற்பனையாகுமா என்பது எனக்குள் இருக்கும் சந்தேகம். அதை எண்ணி எண்ணிக் குழம்பாமல், செயல்பட்டுப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தேன்’ என்று எங்களிடம் பதிப்பக உரிமையாளர் கூறியது, தேன் வந்து காதிலே பாய்ந்த சேதியாகக் கேட்டுக் கொண்டிருந்தோம். அடுத்து அவர் கூறியதுதான் தேனாக இனித்த காதில், வேம்பாகக் கசக்கும் சொற்களாக வந்து விழுந்தன.

இது ஒரு பரிசோதனைப் புத்தகம் என்பதால், பணம் செலவழித்து நான் அழகாகவே புத்தகத்தைப் பதிப்பித்து விடுகிறேன். ஆனால், ஆசிரியருக்கான ராயல்டியோ, எழுத்துக் கூலியோ என்னால், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்குத் தரமுடியாது. ஆகவே, நான் தரக் கூடிய தொகையை நீங்கள் ஒப்புக் கொண்டால், நான் புத்தகத்தை பதிப்பிக்கத் தயார் என்றார்.பதிப்பாசிரியர். = *

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எங்களை அறியாமல், நாங்கள் எச்சிலை விழுங்கிக் கொண்டோம். எச்சில் விழுங்கும் சத்தம் எங்களுக்குத் தெளிவாகவே கேட்டது. அப்படி ஒர் அமைதி எங்களுக்கிடையே அலைபாய்ந்து கிடந்தது. சிறிது நேர யோசனைக்குப் பிறகு தலையை ஆட்டினேன். நான் புத்தகத்தை பதிப்பிக்கத் தயார் என்றார் பதிப்பாசிரியர்.

நாங்கள் இருவரும் மீண்டும் ஒருவர்ை ஒருவர் பார்த்துக்