பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எ

ஏற்றுக் கொள்கிற வகையில் பேச ஆரம்பித்தேன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம்.

முன்னாள் மாணவர் கழகத்தின் சார்பாக இந்தப் புத்தகத்தை வெளியிட வேண்டும். ஆகிற செலவு போக, வருகிற லாபத்தை சரி பாதியாகப் பிரித்து எனக்கும் கழகத்திற்கும் கொடுத்து விடவேண்டும்.

இப்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

1965ம் ஆண்டு 2-வது புத்தகம் வெளிவந்து விட்டது. கையில் காசு கிடைக்கவில்லை என்றாலும், கல்லூரி மூலமாக படிக்கும் உடற் கல்வி மாணவர்களுக்கு கட்டாயமாகப் புத்தகங்கள் கொடுக்கப்படுவதால், சரியான இடத்தில் தான் சேர்ந்திருக்கிறது என்பது தான் எனக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

அந்தப் புத்தகம் விற்றதற்குப் பிறகு, இந்தியாவிலுள்ள உடற்கல்விக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கங்களிலே, அழகப்பாகல்லூரி மாணவர்கழகம் தான் பணக்காரக் கழகமாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிப் பேசுகின்ற அளவுக்கு, பணத்தையும் புகழையும் ஈட்டித்தந்தது.

மாணவர்களுக்கும் மற்ற விளையாட்டு ஆர்வலர்களுக்கும் பயன்தந்தது. மாணவர்கழகத்திற்கும் நல்ல வருமானம் வந்தது.

ஏனோ தெரியவில்லை சில வயிற்றெரிச்சல் வாத்தியார்கள் எனது புத்தகத்தை அந்தக் கல்லூரியில் விற்க முடியாதபடி செய்து மகிழ்ந்து கொண்டார்கள். அந்தப் பொறாமைக்காரர்களால், எனது புத்தகத்தை விற்கச் செய்யாதபடிதான் நிறுத்த முடிந்ததே தவிர, எனது இலக்கிய வேட்கையை, வேள்வியை, இலட்சியத்தை, இதயதாகத்தை, அவர்களால் நிறுத்த முடியவில்லை.