பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

சென்னையில் செட்டிலாகப் போகிறேன். அதற்காகத்தான் உங்கள் பள்ளியில் வேலை கேட்கிறேன் என்றேன். சினிமா . சங்கதிகள் பற்றி அவர்களிடம் ஒன்றும் பேசவில்லை.

(சென்னையில் நிரந்தரமாகத் தங்கி விடப் போகிறேன் என்று அன்று சொன்ன பொய், இன்று உண்மையாகி விட்டது.)

உங்கள் படிப்பு, தகுதி, விளையாட்டில் உள்ள மற்ற தகுதிகள் அனைத்தும் பாராட் டுக் குரியதுதான். ஆனால் , இவ்வளவு தகுதி படைத்த ஒருவர், எங்கள் சிறிய பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராகப் பணியாற்ற முடியாதே. நீங்கள் விரைவில் வேலையை விட்டு போய் விடுவீர்கள் என்று தங்கள் சந்தேகத்தைத் தெரிவித்துவிட்டு, சம்மதத்தையும் கூறினார்கள்.

சினிமா வாய்ப்புகள் இருப்பதாலும் , மேலும் பல புத்தகங்கள் எழுத முடியும் என்ற நம்பிக்கை இருந்ததாலும், போகிற புதிய இடத்தில், 40 வயதுக்கு மேல், லட்சாதிபதியாகி விடுவீர்கள் என்று காரைக் குடி ஜோசியர் சொல்லியிருந்ததாலும், எனக்குள்ளே ஒரு எதிர்கால கனவு அது உறுதியாக மனதில் ஊன்றிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் வெளியே எப்படி சொல்வது?

அதனால் நானும் தைரியமாக அவர்களிடம் ஒரு வாக்குறுதியை அளித்தேன். இந்த நிகழ்ச்சி நடந்தது 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்.

என்னை பணியில் சேர்த்துக் கொள்ள இருவரும் சம்மதம் தெரிவித்தபோது, நான் ஒரு நிபந்தனையைக் கூறினேன்.

நீங்கள் எனக்கு வேலை தருவதாக இருந்தால், அப்பாயின்ட் மென்ட் ஆர்டரை இப்போதே தரவேண்டும். பெற்றுக் கொண்டதும் தான், நான் கல்லூரியில் மூன்று மாத நோட்டீஸ் கொடுப்பேன். பிறகு வந்து சேர்கிறேன் என்று நான் கேட்டதற்கு, இப் பொழுதே ஆர்டர் தருகிறோம். ஜூன் மாதத்தில் வந்து வேலையில் சேர்ந்து விடுங்கள் என்றார்கள்.

அப்பொழுதும் என்மனதில் புதுக்குழப்பம் ஒன்று புகுந்து